top of page

வெள்ளி, நவம்பர் 29 || தெளிதேன் துளிகள்

வாசிக்க: எண்ணாகமம் 35:9-15, 22-25


பின்பற்றவேண்டிய ஒழுங்கு!


தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். - சங்கீதம் 46:1


கர்த்தர், கானான் தேசத்தை கோத்திரவாரியாகப் பிரித்து எல்லைகளைக்குறிக்க மோசேக்கு கட்டளை கொடுத்த கையோடு, ஆறு அடைக்கலப்பட்டணங்களையும் குறித்துவைக்க அவர் கட்டளையிட்டார். யாராவது ஒருவன் கைப்பிசகாய் யாரையாவது கொலை செய்துவிட்டால், தான் நியாயஸ்தலத்தில் நிறுத்தப்படுமுன்பாக தன்னைப் பழிவாங்க நினைப்பவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்படி அடைக்கலம் புகவே இவை நியமிக்கப்பட்டன. (எண்ணாகமம் 35:12) இது நம் ஆண்டவர் எத்தனை கரிசனையுள்ளவர் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. உதாரணமாக, இந்த வேதப்பகுதியில் ஒரு நிகழ்வு கூறப்பட்டிருக்கிறது. ஒருவன் மரத்தை வெட்டும்போது அவன் பயன்படுத்திய கோடரி கைப்பிசகாய் தவறி விழுந்து மரத்தினருகே நின்றுகொண்டிருக்கும் வேறொருவன்மீது பட்டு அவன் இறந்துவிட்டால்; இறந்தவனுடைய உறவினர்கள் அந்த மரணத்திற்குக் காரணமாயிருந்தவனைக் கொல்லும்படி மூர்க்கமடைவார்கள். ஆனால், அவன் இந்தப் பட்டணங்களில் ஒன்றிற்குள் ஓடித் தஞ்சம் புகுந்துவிட்டால், கர்த்தருடைய கட்டளை கூறுகிறபடி விசாரணை செய்யப்படுமளவும் அவர்களது கைக்கு இவன் தப்பித்துக்கொள்ளுவான்.


அன்பானவர்களே, இன்று நாம் நமது பாதுகாப்பிற்காக இப்படிப்பட்ட அடைக்கலப்பட்டணங்களைத் தேடி ஓட வேண்டிய அவசியம் இல்லை; ஏனெனில் நமது ஆண்டவர் நமக்குக் கோட்டையாக, அரணாக, அடைக்கலமாக இருக்கிறார். ஆனால் இந்த வாக்குத்தத்தம் ஏசாயா 33:15,16ல் கூறப்பட்டுள்ள சில நிபந்தனைகளுக்குட்பட்டதாயிருக்கிறது. நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ அவனுக்கு கன்மலையின் அரண்கள் உயர்ந்த அடைக்கலமாகும். நிச்சயமாகவே, இப்படிப்பட்டவர்களுக்கு கர்த்தர் உயர்ந்த அடைக்கலமாயிருந்து, அவனுக்கு உணவும் தண்ணீரும் அளித்து பாதுகாக்கிறார். (வசனம் 16) 

ஜெபம்: பரம தந்தையே, நீர் என் அடைக்கலமாயிருக்கிறீர் என்பது எனக்கு எத்தனை ஆறுதலளிக்கிறது! உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவனாக நான் இருந்தால், எப்போது எந்நேரம் நான் உம்மிடத்தில் வந்தாலும் நீர் எனக்குத் தஞ்சம் தர தயாராயிருக்கிறீர். உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்.

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

תגובות

דירוג של 0 מתוך 5 כוכבים
אין עדיין דירוגים

הוספת דירוג
bottom of page