top of page

வெள்ளி, நவம்பர் 15 || தெளிதேன் துளிகள்

வாசிக்க:  லூக்கா 17: 7-10


தேவன் நம்மில் செய்த கிரியைக்காக நம் சிறிய நன்றி படைப்பு


... நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம். ...  

- லூக்கா 17:10



ஆண்டவரின் ஊழியத்தைத் தீவிரமாகச் செய்யும் ஊழியர்,  அவரது நிறைவான கிருபையைத் தவிர வேறொரு ஆசீர்வாதத்தை எதிர்பார்ப்பாரா? இல்லை. தேவனிடத்தில் அவர்கள் சொல்வது: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்பதே! தேவனுக்கு ஊழியம் செய்வது நாம் பெற்ற சிலாக்கியம்; எனவே, ஊழியம் செய்ததினால் அதிக பிரதிபலன் நமக்கு வரவேண்டும் என்று எண்ணுவது தவறு! நமக்கு அவர் கட்டளையிட்டால், கேள்வியின்றி, தயக்கமின்றி, தடுமாற்றமின்றி கீழ்ப்படியவேண்டும். அப்பிரயோஜனமானவர்கள் நாம் என்று சொல்லும்போது, நம் ஆண்டவருக்கு நாம் பிரயோஜனம் இல்லாதவர்கள் என்பதல்ல அதன் அர்த்தம்; ஆனால், சுயநலமற்ற  மனப்பான்மையோடு, தாழ்மையுடன் செயலாற்றுவதை நமக்குப் பழக்கமாக்கிக்கொண்டோம் என்று அர்த்தம். இயேசுவின் ஊழியன் இத்தகைய மனப்பான்மையை உலகிற்கு வெளிப்படுத்தவேண்டும்; ஏனெனில், அவர் இவ்வுலகில் இருந்தபோது அப்படியே நடந்தார். அவர் ஊழியம்கொள்ள அல்ல, ஊழியம் செய்யவே வந்துதித்தார். (மாற்கு 10:45) உண்மையுள்ள கிஸ்துவின் ஊழியக்காரன், எந்த விதத்திலும் பெருமை கொள்ளக்கூடாது. சுய இறுமாப்பு வேறோடு பிடுங்கப்பட்டு, அதன் இடத்தில் தாழ்மையும் தகுதியின்மையுமான உணர்வு நிரப்பப்படவேண்டும். 


அன்பானவர்களே, பல வருடங்கள் தியாகத்துடன் ஊழியம் செய்ததினிமித்தம் நமக்குள் பெருமிதம் வந்துவிடுகிறது; நம்மை ஆசீர்வதிப்பது கர்த்தரின் கடமை என்று எண்ணுகிறோம். இப்படி கர்த்தரிடத்தில் உரிமை கோரமுடியாது. நாம் பெற்றுக்கொண்டது அவருடைய கிருபை மட்டுமே! நாம் தொலைந்துபோனவர்களாக நரகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். அவர் தம்முடைய இரக்கத்தினால் நம்மை மீட்டெடுத்தார். மேலும் அவருக்குப் பணி செய்கின்ற சிலாக்கியத்தையும் கிருபையாகக் கொடுத்தார். எனவே, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்ததினிமித்தம் நமக்குப் பெருமை வருவது எப்படி? அப்படி வரக்கூடாது. மாறாக, நம்மைக் குறித்து, ஆண்டவரே, நான் அப்பிரயோஜனமற்ற அடிமை, நான் செய்யவேண்டியதை மாத்திரம் செய்தேன் என்று நமக்கு நாமே கூறிக்கொள்ளவேண்டும்.   

ஜெபம்: ஆண்டவரே, உமக்கு முன்பாக நானிருக்கும் தாழ்மை நிலையை எல்லா நாளும்  நினைவுகூருவேன். உம் பிரசன்னம், நான் தூசியும் சாம்பலுமானவன் என்பதை சுட்டிக்காட்டுகிறது. நீர் அல்ல நானே உமக்குக் கடன்பட்டிருக்கிறேன். அப்பிரயோஜனமற்ற அடிமை நான் உம் ஊழியம் செய்வது என் சிலாக்கியம். ஆமென்.

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page