வாசிக்க: லூக்கா 17:26-30
இந்தக் கடைசி நாட்களில் வஞ்சிக்கப்படாதிருங்கள்!
... அவபக்தியையும் லௌகீக இச்சைகளையும் வெறுத்து ... நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் .. ஜீவனம்பண்ணி, .. (தீத்து 2:12)
ஆபிரகாம் அவன் குமாரன் ஈசாக்கு இருவருமாய் மலையின் மேல் நடந்துகொண்டிருந்தனர் - இளைஞனான ஈசாக்கு தகனபலிக்கான கட்டைகளைத் தன் தோளின்மேல் சுமந்து சென்றபோது, தகப்பனான ஆபிரகாம் தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டு அவனுக்குப் பின்னால் சென்றான். தகனபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே என்று ஈசாக்கு கேட்டான். ஆபிரகாம், என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்று பதிலளித்தான். இந்தக் காட்சி பதற்றம் நிறைந்ததாயிருந்தது தன்னுடைய ஒரே குமாரனை ஆபிரகாம் வெட்டத் தயாராய் இருந்தது - கொடுமையோ அல்லது பெருங்கோபமோ அல்ல; இதை அவன் தன் தேவன்மேல் வைத்திருந்த அன்பினாலே செய்தான். இந்த சம்பவம் - தேவன் ஏன் இப்படிப்பட்ட பலியைக் கேட்டார்? என்று நம்மைத் தடுமாறச் செய்கிறது. அவர் அப்படிச் செய்ததற்கான காரணம், அவரே தேவன் என்பதை அவன் அறிந்துகொள்ள இதைத் தவிர வேறொரு வழி இல்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்! நாம் பலிபீடத்திலே ஒன்றை வைத்து அவருக்கு பலிசெலுத்தும்போது - அவர் சிருஷ்டிகர், அவர் தேவன் என்றும் அவரது கரங்களிலே நாம் களிமண்ணாய் இருக்கிறோம் என்றும் - இரு காரியங்களை நாம் லூக்கா 17:26-30ல், ஆண்டவர் இயேசு, கடைசி காலங்களில் நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவே நடக்கும் என்றும், மக்கள் பெண்கொடுத்தும் பெண்கொண்டும், சாப்பிடுவதிலும், குடிப்பதிலும், வாங்குவதிலும் விற்பதிலும், நடுவதிலும் அறுப்பதிலும் தங்கள் நேரத்தைச் செலவிடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார். மேற்குறிப்பிட்ட எந்த செயலும் தன்னிலே தானே பாவமானதல்ல; பிறகு ஏன் ஆண்டவர் அப்படிச் சொன்னார்? ஏனெனில், நாம் வாழும் இந்தக் கடைசி நாட்களில் மக்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அதிகம் அதிகமாக ஈடுபட்டு, கர்த்தருடைய சமுகத்தில் காத்திருப்பதை விட்டுவிடுகிறார்கள். பிசாசு இப்படிப்பட்ட காரியங்களில் அவர்களை ஈடுபடுத்தி கர்த்தரை தங்கள் வாழ்விலிருந்து முற்றிலும் ஒதுக்கிவிடும்படி அவர்களை வஞ்சிக்கிறான்.
அன்பானவர்களே, இன்றைய உலகின் நிலையை நாம் நோவாவின் காலத்தோடு ஒப்பிடுவோமானால் மக்களுடைய மனநிலை அன்றிருந்தது போலவே இன்றும் இருப்பதைக் காணலாம். விசுவாசிகளின் உள்ளத்திலும் உலகம் குடிகொண்டிருப்பதை நாம் காணலாம். முன்னேற்றமடைந்துள்ள தொழில்நுட்பத்தினால், பழங்காலத்திலிருந்ததைக் காட்டிலும் இப்போது புதிய புதிய பொருட்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. எனவே, நமக்கு வேலை சுலபமாகி, அதிகமான நேரம் மிச்சப்படுகிறது. மிகவேகமான போக்குவரத்து சாதனங்களும் வந்துவிட்டன. எனவே பயண நேரம் மிச்சப்படுகிறது. எனினும் நாம் கர்த்தருக்குக் கொடுப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை என்ற பல்லவியையே திரும்பத் திரும்ப பாடிக்கொண்டிருக்கிறோம். இது எந்த வகையில் நியாயம்? ஆனால் கடந்த நூற்றாண்டுகளில் பயணம் செய்வது கடினமான ஒன்றாக இருந்தது என்றாலும் மக்கள் கர்த்தருக்கு அதிக நேரத்தைக் கொடுத்தனர். அதனால் முந்நாட்களில் அதிகமான எழுப்புதல் நடைபெற்றது. இன்று நாம் நம் வாழ்வை ஆராய்ந்து, ஜெபம் மற்றும் வேதவாசிப்பின் மூலம், நமது பரம தகப்பனோடு இன்னும் அதிக நேரம் செலவிட நம்மை அர்ப்பணிப்போம்.
ஜெபம்: தேவனே, உமது வார்த்தையை வாசிக்க எனக்குள் ஒரு வாஞ்சையை நீர் எழுப்பும். உம்மோடு ஐக்கியப்பட அனுதினமும் நேரத்தை ஒதுக்க எனக்கு கிருபை தாரும். இந்த உலகம் என்னை உம்மைவிட்டுத் திசைதிருப்பிவிடாதபடி கவனமாயிருக்க எனக்கு உம் ஆவியின் அநுக்கிரகம் தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comentarios