வாசிக்க: ஏசாயா 5: 1-7
நான் கனிதரும் திராட்சத்தோட்டமாய் இருக்கிறேனா?
தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் ... புத்திசொல்லுகிறோம். - 2 கொரிந்தியர் 6:1
இந்தத் திராட்சத்தோட்டத்தின் பாடல், நாள் முழுதும் சூரிய ஒளியைப் பெறும் செழிப்பான மண்ணில் நடப்பட்ட திராட்சத்தோட்டத்தைச் சித்தரிக்கிறது. ஆனாலும்கூட, நல்ல திராட்சப்பழங்களைத் தரவேண்டிய திராட்சச்செடியானது, கசப்பான திராட்சப்பழங்களைத் தந்தது. இங்கு சொல்லப்பட்ட திராட்சச்செடி இஸ்ரவேல் தேசத்தைக் குறிப்பிடுகிறது. இந்த இஸ்ரவேலுக்கு தமது தாராளமான கவனிப்பைத் தந்த தேவன், அவர்களுடைய அனைத்துத் தேவைகளையும் சந்தித்தார், தமது கிருபையினால் மீண்டும் மீண்டும் மன்னிப்பளித்தார். அப்படி இருந்தும், அவர்கள் நற்கனிகளான நீதியையும், நியாயத்தையும் கொடுக்கவில்லை. அவர் அதைச் சுற்றி குழிதோண்டி, தண்ணீர் பாய்ச்சி, கனியற்றுப்போகாதபடிக்கு அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, நடுவில் ஒரு கோபுரத்தையும் கட்டிப் பாதுகாத்தார். நல்ல திராட்சப்பழங்களைத் தரும் என்று எவ்வளவு ஆசையாய் அதைப் பார்த்திருப்பார்! ஆனால், அதுவோ காட்டுச்செடியைப் போல் வளர்ந்து, பயனற்ற திராட்சப்பழங்களைக் கொடுத்தது! எத்தனை பரிதாபம்!
அன்பானவர்களே, நமது நிலையும் இஸ்ரவேலைப்போல இருக்கிறதே! தேவன் விசுவாசிகளான நமக்குத் தேவையான அனைத்தையும் தந்திருக்கிறார்; ஆகவே தேவபக்தியின் வாழ்வை நம்மால் வாழமுடிகிறது. அவரது வார்த்தையையும், சுவிசேஷப் பணியையும் நமக்குத் தந்திருக்கிறார். அடிக்கடி தோட்டத்துக்கு அவர் வருகை தந்து, தமக்குப் பிரியமான செடியாகிய நம்மிலே ஆவியின் கனியையும் (கலாத்தியர் 5:22,23), ஜெபத்தையும் விண்ணப்பத்தையும், ஸ்தோத்திரத்தையும் தேடுகிறார். அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப் பூத்ததோ என்றும் பார்ப்போம் என்று அவர் சொல்லுகிறார். (உன்னதப்பாட்டு 7:12) ஆனால், நாம் கனியற்றவர்களாக, பலனற்றவர்களாக இருப்பதைப் பார்த்து அவர் ஏமாற்றமும் துக்கமும் அடைகிறார். நமது வாழ்க்கையை நாம் சற்று சோதித்து, என்னவெல்லாம் அங்கே இல்லை என்பதை ஆராய்ந்து பார்ப்போம்! கனி தராததற்கு கூறுகின்ற வெறும் சாக்குபோக்குகளை நாம் அவரிடத்தில் அறிக்கையிடுவோம்.
ஜெபம்: ஆண்டவரே, ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கொடுத்து, உன்னதத்தில் இயேசுவோடென்னை உட்காரவைத்தீர். ஆனால், நீர் எதிர்பார்த்த அறுவடையான கீழ்ப்படிதல், ஸ்தோத்திரம், ஜெபம், ஆராதனையைத் தராமல், கீழ்ப்படியாமை, கலகம், விக்கிரகாராதனை என்ற கசப்புள்ள திராட்சக்கனிகளைத் தந்தேன். உமது கோபாக்கினை என்மேல் விழாதபடி நீர் என்மேல் இரக்கமாயிரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments