top of page

வியாழன், நவம்பர் 07 || தெளிதேன் துளிகள் || வாசிக்க: உபாகமம் 30: 11-20


தேவனே, உமது கட்டளைகளைவிட்டு தூரப் போகமாட்டேன்


நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது.     (உபாகமம் 30:14)



தேவனுக்கு, அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிவது என்பது விசுவாசியின் விருப்பப்படியல்ல. கீழ்ப்படிவது என்ற வார்த்தை வேதாகமத்தில் 350 முறை வருகிறது; இவற்றில் பெரும்பாலானவை பழைய ஏற்பாட்டில் இருக்கிறது. வேதாகமத்தின் கருத்தாக்கம், கீழ்ப்படிதல் என்பது ‡ தேவன் சொன்னதை, அவரது ஜனங்கள் கேட்டு அதன்படி செய்யவேண்டும். கர்த்தர் ஆதாம் ஏவாளைப் படைத்து ஏதேன் தோட்டத்தில் அவர்களை வைத்தபோது, கீழ்ப்படிதல் அங்கே முக்கிய பிரச்சனையாயிற்று. அவர்கள் கீழ்ப்படியாமல் போனதால்,  அவர்களுடைய பாவம் முழு மனுக்குலத்துக்கே ஆக்கினைத் தீர்ப்பை கொண்டுவந்தது; அவர்களும் தேவனைவிட்டுப் பிரிக்கப்பட்டனர். தன் எச்சரிக்கையை ஆதாமும் ஏவாளும் கேட்டு, தான் சொன்னபடி செய்யவேண்டும் என எதிர்பார்த்தார் கர்த்தர். அதுபோலவே தான் தெரிந்துகொண்ட ஜனமாகிய இஸ்ரவேலும் செய்யவேண்டுமென எதிர்பார்த்தார் அவர். அவர் விதித்த கட்டளையானது அவர்களுக்கு மறைபொருளுமல்ல, தூரமானதும் அல்ல. (உபாகமம் 30:11) தம் ஜனங்களால் கூடாத ஒன்றை கர்த்தர் கேட்கவில்லை. அது வானத்தில் இல்லை; ஏற்கனவே அது வெளிப்படுத்தப்பட்டது; அது தேடிப்போக வேண்டியதாய் கடல்கடந்தும் இல்லை. வார்த்தையானது சீனாய் மலையிலே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. 

ன்பானவர்களே, இன்று தேவன் தம்மை வேதாகமத்தில் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். யாரும் எனக்குத் தெரியாது என்று சொல்லமுடியாதபடி வேதாகமம் மிக எளிமையாயுள்ளது. பாவத்தினால் வரும் நியாயத்தீர்ப்பைப்பற்றி அது கடுமையாகப் பேசினாலும்கூட, பாவமன்னிப்பின் வாக்குத்தத்தத்தைப் பற்றியும் கூறுகிறது. தேவனை, நமக்கு அவர் வைத்திருக்கும் சித்தத்தை அறிவதைக்குறித்து வேதாகமத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், பிரச்சனை என்னவென்றால், அநேக கிறிஸ்தவர்கள் வேதத்தை வாசிக்க நேரமே தருவதில்லை. நாம் அவர் திட்டத்தை நோக்கத்தை தெளிவாக அறிந்துகொண்டு, அவரை நேசிக்க, அவருக்குக் கீழ்ப்படிய, அவரைப் பற்றிப்பிடிக்க ‡ அவருடைய வார்த்தையை வாசிக்கவேண்டும் என்பது அவருடைய விருப்பம். எனவே, அவரது குரலைக் கவனமாய் கேட்டு, முழு இருதயத்துடன் அவருக்குக் கீழ்ப்படிய இன்றைக்கே நாம் ஒரு முடிவெடுப்போம். 

ஜெபம்:  ஆண்டவரே, உம்மை அதிகம் அறிந்து அனுபவிப்பதைக் கற்கும்படிக்கு நான் விரும்புகிறேன். என் கரங்களில் நீர் கொடுத்திருக்கும் உம் வார்த்தையைப் படித்து, உம்மை, என் வாழ்வில் நீர் வைத்துள்ள திட்டத்தைப் புரிந்துகொள்ள உதவும். கலக குணமற்ற, கீழ்ப்படிதலுள்ள இருதயம் எனக்கு வேண்டும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page