வாசிக்க: அப்போஸ்தலர் 1:10,11; யாக்கோபு 5:7,8
அவர் சீக்கிரம் வருகிறார்!
நீங்கள் ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து ... காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். (எபேசியர் 5:15,16)
இயேசுவின் இரண்டாம் வருகை நிச்சயமானது. ஏனெனில், ஆண்டவர் இயேசுவே அதைக்குறித்து - அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும்; மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள் என்று மத்தேயு 24:30ல் கூறியுள்ளார். பவுலும் 1 தெசலோனிக்கேயர் 4:16ல், கர்த்தர்தாமே ஆரவாரத்துடனும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். எனவே, நாம் மிகவும் கவனத்துடன் திடீரென்று வரப்போகும் ஆண்டவருடைய வருகையை எதிர்நோக்கியிருப்பது அவசியம். 1 தெசலோனிக்கேயர் 5:1-3ல், இரவிலே திருடன் வருகிறவிதமாய் கர்த்தருடைய நாள் வருமென்றும், சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று சொல்லும் வேளையில் அழிவு சடிதியாய் வருமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. மத்தேயு 24:27, மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷ குமாரனுடைய வருகையும் இருக்கும் என்று கூறுகிறது.
அன்பு நண்பர்களே, ஜான் வெஸ்லியிடம் ஒருமுறை, இன்று இரவு நீங்கள் மரித்துவிடுவீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் எனக் கேட்டபோது அவர், இன்றைக்கு நான் என்ன செய்யத் தீர்மானித்திருந்தேனோ, அதன்பிரகாரமாகவே செய்வேன் என்றார். அதாவது, அவர் எந்த நேரத்திலும் கர்த்தருடைய வருகையை எதிர்நோக்கியிருந்தபடியால் ஒவ்வொரு நாளின் வேலையையும், இன்று கர்த்தரின் வருகை இருக்குமானால், என்ற நினைவுடனேயே செய்தபடியால் அவரால் அப்படிக் கூறமுடிந்தது. நம்மாலும் அவ்வாறு கூற இயலுமா? நம் வாழ்க்கை முறையை சற்று நாம் ஆராய்வோம். நமது ஆண்டவருடைய வருகையை நாம் எதிர்பார்த்து வாழ்வோம். இவ்வுலகின் மாயையான காரியங்கள் நம்மை ஆட்கொள்ளவிடாமல், நமது குடியிருப்பு பரலோகத்திலிருக்கிறது என்று அறிந்து, அதை அடைவதற்கு ஆவலுள்ளவர்களாய் ஜீவிப்போம்.
ஜெபம்: பரம தகப்பனே, இயேசுவின் இரண்டாம் வருகை எனக்குள் அதிகமான எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் கொண்டுவருகிறது. அந்த உன்னத நிகழ்வுக்கு அனுதினமும் என்னைத் தயார்படுத்திக்கொள்ள எனக்கு உதவி செய்யும். மற்றவர்களையும் தயார்படுத்த கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments