top of page

வெள்ளி, அக்டோபர் 04       வாசிக்க: லூக்கா 10: 38-42

Updated: Oct 4

தேவ பணி செய்தல்


... தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து ...   (எபிரெயர் 13:21)      



கலக குணமுள்ள மனித இனத்தைத் நோக்கின தேவன், பலவிதத் தேவைகளால் சீர்குலைந்த உலகத்தையும் கண்டார். உடைந்த உள்ளம் மற்றும் வேதனை, மனச்சோர்வு மற்றும் வியாதி, பாவம் மற்றும் கலகம் இவற்றைக் கண்டதும் அவர்களது தேவைகளைச் சந்தித்தார். எப்படி? தமது ஒரே குமாரனை இந்த உலகத்துக்கு அனுப்பித் தந்து, மரிக்கும் ஆத்துமாக்களை நித்திய அழிவினின்று இரட்சித்தார். அவர் அன்பும் மனதுருக்கமுமுள்ள தேவன். அது மட்டுமல்ல! தமது சுபாவத்தை நமக்குத் தந்தார்; அவரது மீட்பின் பணியை நாம் செய்யவேண்டுமென்று விரும்புகிறார். அவரது கிருபையை மட்டும் நாம் பெறவில்லை, அவரோடு சேர்ந்து அவர் பணிசெய்யும் ஊழியர்களுமானோம்! நம்மைச்சுற்றி பாவமான வாழ்க்கை வாழ்ந்து வேதனைப்படும் ஜனங்கள் இருக்கிறார்கள். நம்மை இரட்சிக்கும்படி இயேசுவை இந்த உலகத்துக்கு அனுப்பிய தேவன், நற்செய்தியைச் சொல்ல நம்மை மறுபடியும் இவ்வுலகுக்குள் அனுப்பி, அவரது மீட்பின் பணியைத் தொடர விரும்புகிறார். எனவேதான், நம் மூலம் கிரியை செய்து, ஜனங்களின் தேவையை சந்திக்க விரும்புகிறார். அன்பு, மனதுருக்கம், இரக்கம், சமாதானம், நம்பிக்கை இவற்றைக் கொண்டுள்ள கர்த்தர், நம்மை அவரது அன்பின் கருவிகளாய் பயன்படுத்த விரும்புகிறார். புதிய ஏற்பாட்டு சபையை இது வரைந்து காட்டுகிறது. இந்த மீட்பின் பணியை நிறைவேற்ற நம்மைத் தம்மோடு இணைத்து வைத்திருக்கிறார் தேவன். மீட்பு என்பது தேவனுக்கு முன்பாக நம்மை நிறுத்துவது மட்டுமல்ல, அவரோடுகூட முழுவதுமாக ஒன்றாயிருப்பதையும் குறிக்கிறது! அவர் தம்மை வெளிப்படுத்தினதைப்போல நாமும் அவரை வெளிப்படுத்தவேண்டும், அந்த வெளிப்பாட்டில் ஒரு பகுதி - அவரைத் தேடுவோர்மீது வைராக்கியமான நமது மனதுருக்கம்! அவருடைய இந்த சித்தத்தை நிறைவேற்றவே அவர் நம்மில் கிரியை செய்கிறார்!


அன்பானவர்களே, தம்மை நமக்கு வெளிப்படுத்தினார் தேவன்; ஆனால், அவசரத் தேவையிலுள்ள உலகுக்கு நம் மூலமாக அவர் தம்மை இன்று வெளிப்படுத்துகிறாரா என்பது  கேள்வி! அதற்கான நம் பதில், தேவனுடைய பணியில் நான் அவரோடு இணைந்துள்ளேனா? என்பது மிகவும் இன்றியமையாதது.

ஜெபம்ஆண்டவரே, எங்கள்மீதுள்ள உம் அன்பினால், பாவங்களிலிருந்து எங்களை மீட்க உம் ஒரே குமாரனை உலகுக்கு அனுப்பினீர். மீட்கப்பட்ட நான் உமது மீட்பின் பணியை இன்று நிறைவேற்ற உதவும். என்மூலம் இந்த தொலையும் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தும்; உம்முடன் உம் பணி செய்ய உதவும். ஆமென்



 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page