வாசிக்க: யோவான் 8: 1-11
தேவ அன்பு எல்லையற்றது, அவர் கிருபை அளவற்றது!
அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். - யோவான் 1:16
கிருபை (கேரிஸ்) என்ற வார்த்தை சந்தோஷமாயிருத்தல் (கேரியோ) என்று அர்த்தப்படும். ஆங்கிலத்தில் அதை பரோபகாரம் (சாரிட்டி) என்று கூறுவார்கள். பிச்சைக்காரர்கள் பரோபகாரத்தை எதிர்பார்ப்பதுபோல, பாவிகள் கிருபையை எதிர்பார்க்கிறார்கள்; ஏனென்றால் நாம் அனைவருமே கிறிஸ்துவல்லாமல் ஆவிக்குரிய பிச்சைக்காரர்களாய் இருக்கிறோம். பரிசுத்த அகஸ்டின் இப்படிச் சொன்னார் வெறுங்கைகளை எங்கே தேவன் காண்கிறாரோ அதில்தான் அதிகமாய்க் கொடுக்கிறார்! வேதம், கிருபை அன்பைக் காட்டிலும் பெரிது என வேதம் சொல்கிறது என்று சொல்வார்கள்; காரணம் செயலாற்றும் அன்பே கிருபை. இயேசுகிறிஸ்துவின் நாமம், தோற்றம், செயல்களின் ஒட்டுமொத்த உருவமே கிருபை! ஆனால், ஆச்சரியமான காரியம் என்னவென்றால், கேரிஸ், கிருபை என்ற வார்த்தைகளை இயேசு பயன்படுத்தவே இல்லை. அவர் அதைத் தன் வாழ்வில் காண்பித்தார். ஆகவேதான், தம்முடைய அடிச்சுவடுகளில் நாம் நடக்க ஒரு மாதிரியைக் கொடுத்தார். யோவான் 8: 1-11ல், விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் குறித்து நாம் வாசிக்கிறோம். அத்தகையவர்களைக் கல்லெறிந்து கொல்ல நியாயப்பிரமாணம் கூறுகிறது. சுற்றியும் நின்ற சுயநீதி உள்ள பரிசேயர்கள், அப்படியே செய்யச் சொன்னபோது, இயேசு உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கற்லெறியக் கடவன் என்று பதிலளித்தார். எத்தனை கிருபை! அவர்கள் நியாயப்பிரமாணத்தின்படி அவள்மேல் கல்லெறிந்து புதைப்பதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் இருப்பதால், அப்படிச் செய்ய ஆக்ரோஷத்துடன் அவர்கள் நின்றார்கள். ஆனால், கிருபையுடன் இடைப்பட்டார் இயேசு! மேலும், அவர் பேசுவதைக் கேட்க வந்தவர்களிடம், கிருபையை மையமாய் வைத்து உவமைகளைப் பேசுவது அவருக்குப் பிரியம்! நல்ல சமாரியன் உவமையில், அவர் உதவியற்று காயப்பட்டவனாய்க் கிடந்தவனுக்கு சமாரியன் காட்டிய கிருபையை மிகைப்படுத்திக் கூறினார்.
அன்பானவர்களே, கர்த்தருடைய கிருபையை நாம் அல்லத்தட்டவேண்டாம். நாம் அதைப் பெற்றுக்கொண்டால், வழிந்தோடுகின்றவரை நம்மை நிரப்பும். நாம் எதிர்த்து நின்றால், வெறுமையும், வறண்டதுமான ஆவிக்குரிய வறுமையில் வைக்கும். உலகப்பற்று, கசப்பு, வேறெந்த பாவத்தில் நாம் சிக்கியிருக்கும் நிலையில், நம்மேல் தம் கிருபையை அவர் ஊற்றவேண்டும் என்று விரும்பினால், அவர் கிருபையைக் கேட்டு கதறுவோம். அவரிடம் வந்த எவரையும் வெறுமையாய் விட்டுப் போகமாட்டார் அவர்!
ஜெபம்: ஆண்டவரே, கிருபை நான் சம்பாதிக்கமுடியாத தயவு, தகுதியற்ற எனக்கு விலைமதிப்பற்ற ஈவு. என் செயலினால் அல்ல, இலவசமாக உம் குமாரன் இயேசுவின் மூலம் நீர் கொடுத்த பரிசு. அனுதின சூழ்நிலைகளில் உம் கிருபை எனக்கு வேண்டும். உம் கிருபையை அளவில்லாமல் என்மேல் ஊற்றும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments