top of page

புதன், நவம்பர் 06 தெளிதேன் துளிகள்

வாசிக்க: எபேசியர் 5: 15-20 தெளிதேன் துளிகள்


காலத்தைப் பிரயோஜனப்படுத்து! அது பறந்துசெல்கிறது


நீங்கள் ... கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். - எபேசியர் 5:15,16

காலமிருக்கக்கொள்ள என்பதற்கான லத்தீன் வார்த்தை, ஓபி போர்ட்டு. நவீனகால துறைமுகங்கள் வருவதற்கு முன்னால், பண்டைய காலத்தில் பத்திரமாகத் துறைமுகம் அடைவதற்காக, அலைகள் உயரம் சரியான அளவு உயரும் வரையில் கப்பல்கள் காத்துக் கிடக்கும். ஓபி போர்ட் என்பது, துறைமுகம் செல்லக் காத்திருக்கும் கப்பல் அலை உயருகின்ற சரியான நேரத்தைப் பயன்படுத்தி பத்திரமாக துறைமுகம் சென்று சேருவதை விளக்குகின்றது. அலைகள் உயரும் தருணத்தை கப்பலின் மாலுமி தவறவிட்டால், அது மறுபடியும் வரும்வரை கப்பல் காத்திருக்க வேண்டியதுதான். நமக்கு அநேக வாய்ப்புகளை - ஓபு போர்ட்டு ‡ தருகிறார் கர்த்தர். ஆனால், ஆவிக்குரிய ஞானமும், பரிசுத்த ஆவியினுடைய வழிநடத்துதலும் இருந்தால்தான் அவற்றைப் பார்த்து பிடித்துக்கொள்ளமுடியும்! 16ம் நூற்றாண்டின் சீர்திருத்தவாதி மெலங்கத்தான் வீணாய் தான் செலவிட்ட நேரங்களை எழுதிவைத்து, ஒவ்வொரு நாளின் முடிவிலும் அறிக்கை செய்து ஒப்புக்கொள்வார். தேவன் அவரை வல்லமையாய்ப் பயன்படுத்தினதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! தேவபிள்ளைகளான நமக்கு ஊழியம் செய்யும் வாய்ப்பென்பது நமக்குப் பிரியமற்ற நேரங்களிலும் - அதாவது, ஒரு நண்பனுக்கு ஆலோசனை தேவைப்படலாம், தேவையுள்ள ஒருவருக்கு உதவிக்கரம் நீட்டவேண்டி ‡ வரக்கூடும். எனவே, எந்நேரமும் வேலையில் மும்முரமாயிருந்து தேவராஜ்ஜிய தரிசனத்தை இழந்துவிடக் கூடாது. நம் பாதையில் வருகின்ற சந்தர்ப்பங்களைச் சிறப்பாய்ப் பயன்படுத்துவோம்.

அன்பர்களே, கடந்துபோன நேரத்தை மீட்பதென்பது முடியாத காரியம். பணத்தை நாம் திரும்பவும் சம்பாதிக்கலாம்; ஆனால் நேரத்தை நம்மால் சம்பாதிக்க முடியாது. போன நேரம் போனதுதான். சென்ற வாழ்நாளும் திரும்ப வராது. காலங்கள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியால், எதிர்ப்புகளும் அதிகமாய் இருக்கிறது. இன்றைய வேதப்பகுதியில், நம் வாழ்க்கையிலே தேவையற்ற காரியங்களை நிரப்பாமல், தேவையுள்ளோருக்கு உதவத் தயாராயிருக்கும்படி பவுல் நம்மை ஊக்கப்படுத்துகிறார். தேவபிள்ளைகளான நமக்கு ஊழியம் செய்யும் வாய்ப்பென்பது நமக்குப் பிரியமற்ற நேரங்களிலும் ‡ அதாவது, ஒரு நண்பனுக்கு ஆலோசனை தேவைப்படலாம், தேவையுள்ள ஒருவருக்கு உதவிக்கரம் நீட்டவேண்டி ‡ வரக்கூடும். எனவே, எந்நேரமும் வேலையில் மும்முரமாயிருந்து தேவராஜ்ஜியத்தின் தரிசனத்தை இழந்துவிடக் கூடாது. நம் பாதையில் வருகின்ற வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்துவோம்.    

ஜெபம்: ஆண்டவரே, நேரம் பறந்துபோகிறது. கடந்த காலத்தை என்னால் மீட்க முடியாது. காலத்தைப் பிரயோஜனப்படுத்த எனக்கு உதவும். என் பணிகளுக்கு சிரமம் ஏற்பட்டாலும், தேவபணிக்கான வாய்ப்பை சிறப்புடன் பயன்படுத்த உதவும். எந்தக் கணத்தையும் வீணாக்காமல், உம் நாம மகிமைக்காக பயன்படுத்துவேன். ஆமென்.

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page