top of page

புதன், டிசம்பர் 04 || தெளிதேன் துளிகள்

வாசிக்க: ஆதியாகமம் 22: 1-14



கீழ்ப்படிதலும், அதினிமித்தம் வரும் ஆசீர்வாதமும்


 நீ உன் புத்திரன் என்றும், .. பாராமல் அவனை ஒப்புக்கொடுத்(தபடியால்); நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதி(ப்பேன்). (ஆதியாகமம் 22:16,17)


 ஆபிரகாம் அவன் குமாரன் ஈசாக்கு இருவருமாய் மலையின் மேல் நடந்துகொண்டிருந்தனர் -‡ இளைஞனான ஈசாக்கு தகனபலிக்கான கட்டைகளைத் தன் தோளின்மேல் சுமந்து சென்றபோது, தகப்பனான ஆபிரகாம் தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டு அவனுக்குப் பின்னால் சென்றான். தகனபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே என்று ஈசாக்கு கேட்டான். ஆபிரகாம், என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்று பதிலளித்தான். இந்தக் காட்சி பதற்றம் நிறைந்ததாயிருந்தது ‡ தன்னுடைய ஒரே குமாரனை ஆபிரகாம் வெட்டத் தயாராய் இருந்தது - கொடுமையோ அல்லது பெருங்கோபமோ அல்ல; இதை அவன் தன் தேவன்மேல் வைத்திருந்த அன்பினாலே செய்தான். இந்த சம்பவம் - தேவன் ஏன் இப்படிப்பட்ட பலியைக் கேட்டார்? என்று நம்மைத் தடுமாறச் செய்கிறது. அவர் அப்படிச் செய்ததற்கான காரணம், அவரே தேவன் என்பதை அவன் அறிந்துகொள்ள இதைத் தவிர வேறொரு வழி இல்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்! நாம் பலிபீடத்திலே ஒன்றை வைத்து அவருக்கு பலிசெலுத்தும்போது - அவர் சிருஷ்டிகர், அவர் தேவன் என்றும் அவரது கரங்களிலே நாம் களிமண்ணாய் இருக்கிறோம் என்றும் - இரு காரியங்களை நாம் ஒத்துக்கொள்கிறோம். இதுவே நம் வாழ்வில் அவரது நன்மைத்துவத்தையும், கொடுத்தலையும் அனுபவிக்கத்தக்கதாக நாம் செலுத்தத்தக்க தாழ்மையுள்ள பலி!


 அன்பானவர்களே, ஆபிரகாமைப்போல் நாமும் இத்தகையை கடின சூழ்நிலைகளை ஒரு முறையல்ல பலமுறை சந்திக்கிறோம். பிள்ளையை பலிபீடத்தில் வைக்கும் நிலை நமக்கு வந்திருக்காது, ஆனால், உறவுகள், தொழில், வெகுமதி, கனவுகள் போன்ற வேறு எதையாவது நாம் அங்கு வைத்திருப்போம். அது எதுவாயினும் - தன் ஒரே மகனைப் பலிபீடத்தில் வைத்த ஆபிரகாமைப்போல் - நாமும் வைத்திருந்தால், தேவனே யேகோவா யீரே; கர்த்தர் நல்லவர், நமது தேவைகள் அனைத்தையும் அவரே சந்திப்பார் என்று அறிந்துகொள்வோம்! 


ஜெபம்: ஆண்டவரே, யேகோவா யீரே, என் தேவைகளைச் சந்திப்பவரே, கடின காரியத்தை என்னிடம் நீர் கேட்கையில் நான் தயங்குகிறேன். என் வாழ்வை மறுபடியும் உமக்கு சமர்ப்பிக்க எனக்கு கிருபை தர ஜெபிக்கிறேன். நீர் எதைக் கேட்டாலும், தயக்கமின்றி நான் உமக்குத் தர சம்மதிக்கிறேன். ஆமென்





தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação
bottom of page