top of page

புதன், அக்டோபர் 30

வாசிக்க: நியாயாதிபதிகள் 6: 11-16


வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறவர்களாயிருங்கள்!

நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்... - எபேசியர் 2:10

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், பிரிட்டிஷ் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் நடத்திய அடிமை வியாபார ஒழிப்புப் போராட்டத்தினால் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டன என்பது சரித்திரம். அவர் ஒரு இளைஞனாயிருந்தபோது அவருக்கும் - எனது வாழ்க்கையில் என்னால் ஏதாவது செய்யமுடியுமா என்ற கேள்வி இருந்தது.  வசதி படைத்த இளைஞனாயிருந்த அவர் பல கேளிக்கைகளில் உல்லாசமாக நேரத்தைச் செலவிட்டவர். ஆனால், இயேசுவை சொந்த

இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாள் முதல் அவரது கண்ணோட்டம் முற்றிலும் மாறியது. தன்னுடைய நேரத்தையும் தாலந்துகளையும் சரியான முறையில் உபயோகிக்கவேண்டுமே என நினைத்த அவர், முதலில் ஒரு பாதிரியாராவதற்கு விருப்பம் காட்டினார். ஆனால் தன் நண்பரும் பாதிரியாருமான, ஜான் நியூட்டனின் அறிவுரையைக்கேட்ட அவர், தனது தாலந்துகளைப் பயன்படுத்தி இங்கிலாந்தில் நடைமுறை மாற்றங்களைக் கொண்டுவரவேண்டுமென்பது தெய்வ திட்டம் என உணர்ந்தார். வில்பர்ஃபோர்ஸ் ஒரு அரசியல் தலைவராக, பாராளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு அடிமை வியாபாரத்தை ஒழிக்கவும், பல நல்ல மாற்றங்களை பிரிட்டிஷ் சமுதாயத்தில் கொண்டுவரவும் காரணமாக இருந்தார். மற்றவர்களைக் குறித்த அவரது கரிசனை, வேத அறிவின் அடிப்படையிலானது என்பதால் தெரிந்தவரோ தெரியாதவரோ, அடிமையோ சுயாதீனனோ எல்லோர்மேலும் ஒரேமாதிரியாக அவர் கரிசனை காட்டினார்.

அன்பு நண்பர்களே, வில்லியம் வில்பர்ஃபோர்ஸைப்போல அரசியல் தலைவராவதற்கு நாம் அழைக்கப்படாமல் இருந்தாலும், நமது பரம தகப்பன் நம் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை வாய்ந்த பொறுப்புகளைக் கொடுத்து, நாமும் நமது சமுதாயத்தில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டுவரவேண்டுமென்று விரும்புகிறார். தேவனால் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தாலந்துகள் எவை என்பதை உணர்ந்து, அவற்றைக் கொண்டு மற்றவர்களுக்கு நாம் எப்படி உதவமுடியும் என்று சிந்திக்க நாம் நேரம் எடுக்கவேண்டும். எந்தெந்த வகைகளில் அவற்றைப் பயன்படுத்தமுடியுமோ, பயன்படுத்தி நாம் வசிக்கும் இடத்திலும், நமது சபையிலும், நமது சமுதாயத்திலும் மாற்றங்களைக் கொண்டுவரப் பாடுபடவேண்டும். 

ஜெபம்: ஆண்டவரே, நான் மிகச் சாதாரணமானவன். ஆனாலும்  பலவீனனான கிதியோன், திக்குவாயனான மோசே இவர்களைப் போல என்னையும் வல்லமையான கருவியாகப் பயன்படுத்தி சபையிலும் சமுதாயத்திலும் மாற்றங்களைக் கொண்டுவர உபயோகியும். ஆமென்.
 

அன்பானவர்களே


இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12  மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து,  இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம்.  நீங்கள் எந்த அரை மணி  நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும்.  நன்றி.

அலுவலக தொடர்பு எண் - 9444456177.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 


கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான, 

சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்



 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação
bottom of page