திங்கள், மார்ச் 31 || பார்வோனைப் பார்த்து எச்சரிப்படையுங்கள்!
- Honey Drops for Every Soul
- Mar 31
- 1 min read
வாசிக்க: யாத்திராகமம் 10: 2-29
... இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்,... உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள். - எபிரெயர் 3:7,8
அவனவனது குணாதிசயத்திற்கு ஏற்ப கர்த்தர் அவனவனுக்குக் காட்சியளிக்கிறார் என்று சார்லஸ் ஸ்பர்ஜன் கூறுகிறார். இதற்கு ஒரு சரியான உதாரணம் எகிப்தின் மன்னனான பார்வோன். தொடர்ந்து மோசேயும் ஆரோனும் அவனோடு இடைபட்டும் கர்த்தரின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவோ, அவரது கட்டளைக்குக் கீழ்ப்படியவோ அவனுக்கு மனமில்லாமல் போனது. எகிப்தின் நீர் ஆதாரங்கள் ரத்தமாய் மாறியும், தவளைகளால் வாதிக்கப்பட்டும் அவன் பணியவில்லை. முதல் ஏழு வாதைகளை அனுப்புமுன்னரே பார்வோனைக் கர்த்தர் எச்சரித்தார். என்றாலும் அவரது சத்தத்திற்கு அவன் கீழ்ப்படியவில்லை. ஒவ்வொரு முறையும் கர்த்தர் சொன்னபடியே காரியங்கள் நடந்தபோதும், பார்வோனோ அவனது பிரதானிகளோ, தங்களால் கர்த்தர் செய்த காரியங்களைத் தடைசெய்யமுடியாமல் போனபோதும்கூட, கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார் என்பதை ஒத்துக்கொள்ளவில்லை. முழு எகிப்து தேசத்திற்கும் எதிராக கர்த்தரின் கரம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் உணரவேயில்லை. எனவேதான், கர்த்தர் சங்காரத் தூதனை அனுப்பி, பார்வோனின் குமாரன் உட்பட, எகிப்தின் தலையீற்றையெல்லாம் சங்கரிக்கவேண்டியதாயிற்று.
அன்பு நண்பர்களே, பார்வோனின் இருதயக் கடினமும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் நமக்கு எச்சரிப்பாக அமையட்டும். நமது பாவ இருதயம் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்கவோ, கீழ்ப்படியவோ மறுக்குமானால், அது மாற்றமடையவே முடியாது. எவ்வளவுக்கெவ்வளவு நாம் கர்த்தருடைய வார்த்தையை அங்கீகரிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் தயங்குகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நமது இருதயம் இன்னும் கடினப்பட்டுத்தான் போகும். அதன் விளைவாக நாம் முரட்டாட்டம் பண்ணுகிறவர்களாக மாறி, கீழ்ப்படியாமையினால் அழிவைச் சந்திக்கிறவர்களாகிப்போவோம். எனவே, கர்த்தருக்கும் அவரது வார்த்தைக்கும் எதிர்த்து நிற்காமல், தாழ்மையுடன் கீழ்ப்படிந்து அழிவிற்குத் தப்பிக்கொள்ள அவரது கிருபையை நாடுவோம்.
ஜெபம்: தேவனே, பார்வோனின் முரட்டாட்டம் எகிப்திற்குப் பேரழிவை உண்டாக்கியது என்று புரிந்துகொண்டேன். உமது வல்லமையான செயல்களைக் கண்டும் அவன் மனந்திரும்பவில்லை. நான் அப்படி இல்லாமல் உமக்கும் உமது வார்த்தைக்கும் எப்போதும் கீழ்ப்படிய கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments