top of page

திங்கள், மார்ச் 24 || எங்கும் எப்போதும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்!


... பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே; நான் உன்னுடனேகூட இருக்கிறேன்... - அப்போஸ்தலர் 18:9,10



இன்றைய வேதப்பகுதியில் அத்தேனே பட்டணத்திலிருந்து கொரிந்து பட்டணத்திற்கு வந்த பவுலைக் குறித்து வாசிக்கிறோம். அங்கு வந்ததும் ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் தம்பதியருடன் அவன் சேர்ந்துகொண்டு, தன் ஜீவனத்துக்காக கூடாரத்தொழில் செய்தான். பவுல் ஆவியின் நிறைவைப்பெற்ற ஒரு தாசன். எனவே, அவன் வாயை மூடிக்கொண்டிராமல் தைரியமாக கிறிஸ்துவைப் பற்றிப் பேசிக்கொண்டேயிருந்தான். முதலாவது, ஓய்வு நாட்களில் யூதர்களையும் கிரேக்கர்களையும் சந்தித்து சுவிசேஷத்தை அவர்கள் புரிந்துகொள்ளும்விதத்தில் சம்பாஷித்தான். அவர்கள் கேள்விகள் கேட்டபோது அவற்றுக்குத் தகுந்த பதிலளித்தான். இரண்டாவதாக, இன்னும் ஒருபடி மேலேபோய், அவர்களோடு தர்க்கம் செய்தது மட்டுமல்லாமல், அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்வரை மறுபடியும் மறுபடியும் தொடர்ந்து அவர்களோடு இடைபட்டுக்கொண்டேயிருந்தான். மூன்றாவதாக, இயேசுவே கிறிஸ்து என்று திருஷ்டாந்தப்படுத்தினான். அதாவது, அப்போஸ்தலர் 1:8 சொல்வதுபோல கிறிஸ்துவிற்குச் சாட்சியாக நின்றான். அதற்காக அவன் பயங்கர எதிர்ப்பைச் சந்திக்கவேண்டியதாயிற்று. எனினும் அவனுக்குள்ளும் பயங்கள் இருந்திருக்கவேண்டும். எனவேதான்,  பயப்படாமல் பேசு, நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் அவனைத் திடப்படுத்தவேண்டியதாயிருந்தது. இதன் காரணமாகவே, பவுல் மேலும் சிலகாலம் அந்தப் பட்டணத்திலேயே தங்கியிருக்க முடிவெடுத்தான். (வசனம் 18)

 பிரியமானவர்களே, சுவிசேஷத்தை நாம் மற்றவர்களிடம் தர்க்கித்தோ, சாட்சியிட்டோ அல்லது வேறெந்தமுறையிலோ அறிவித்துக்கொண்டேயிருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். நம் ஆண்டவர் தமது ஆவியினால் நம்மை நிரப்பி, நம்மோடு இருந்து நம்மைத் தைரியப்படுத்துவார். ஆகவே, தைரியமாக நற்செய்தி கூறி மக்களை அவரிடம் கொண்டுவருவோம்.
ஜெபம்: தேவனே, நற்செய்தி அறிவிக்காமல் நான் அநேக ஆண்டுகள் மௌனமாக இருந்ததற்காக என்னை மன்னியும். உமது ஆவியினால் என்னை நிரப்பி, என்னோடிருந்து, நான் தைரியமாக வாயைத் திறந்து மற்றவர்களோடு தர்க்கித்து, சாட்சிகூறி அவர்களை உம்மிடம்  திருப்பக் கிருபை தாரும். ஆமென். 
 

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Yorumlar

5 üzerinden 0 yıldız
Henüz hiç puanlama yok

Puanlama ekleyin
bottom of page