top of page

திங்கள், டிசம்பர் 02 || தெளிதேன் துளிகள்

வாசிக்க: எரேமியா 29: 11-14


தேவன்  நம்மை விசாரிக்கிறவராயிருக்கிறார்


... நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. - எரேமியா 29:11


நம்பிக்கையற்ற நிலை நம் வாழ்வில் ஏற்படும்போது எதைச் செய்தாலும் இழந்ததை மீண்டும் பெறமுடியாது என்று நினைத்து விட்டுவிடுகிறோம். ஆனால், நெகேமியாவின் புத்தகத்தை வாசிக்கும்போது கர்த்தருடைய உதவி நமக்குக் கிட்டுமானால், நாமும் ஒற்றுமையோடு செயல்படுவோமானால் பழைய நிலையை மீட்டுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை நமக்கு வருகிறது. இடிந்துபோன அலங்கத்துக்கு நெகேமியா செய்தது என்ன? முதலாவது, கண்ணீருடனும் தாழ்மையுடனும் கர்த்தரின் பாதத்தில் அமர்ந்து அவரிடம் உதவிகேட்டு விண்ணப்பம் பண்ணினான். இரண்டாவதாக, அலங்கத்தைக் கட்டத் தேவையானவற்றைத் திரட்ட தன் மக்களிடமும், ராஜாவிடமுமிருந்து பொருளுதவிகளையும் பெற்றான். மூன்றாவதாக, எருசலேமுக்குச் சென்று இழப்பின் தன்மையை அளந்து, செய்யவேண்டியதைத் திட்டம் பண்ணினான். அதற்குப் பிறகும் காரியம் சுலபமாக முடியவில்லை. சன்பல்லாத், அந்த பலவீனமான யூதர்கள் என்ன செய்கிறார்கள், இந்த வேலையை ஒரே நாளில் அவர்கள் முடிப்பார்களோ? என்று அவர்களை கேலிசெய்து, அவர்களை மனமடிவாக்கினான். ஆனால் நெகேமியா, அசையாமல் கர்த்தருடைய வேலையைத் தொடர்ந்தான். ஒவ்வொரு குடும்பத்திற்குரிய வேலையையும் இடத்தையும் அவரவர்களுக்கு குறித்துக்கொடுத்தான். ஐம்பத்திரண்டே நாட்களில் அவர்கள் அதைச் செய்துமுடித்து சாதனை படைத்தார்கள். எப்படி இது நிகழ்ந்தது? கர்த்தர் அவர்களோடிருந்து உதவி செய்தார்; தலைவர்கள் அவர்களை உற்சாகப்படுத்தினார்கள்; மக்களும் ஒற்றுமையாக இருந்து ஒருமனிதனைப்போல ஜீவ தேவன் இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் திட்டம் ஒன்றை வைத்துள்ளார். வாய்ப்பாலோ, தற்செயலாலோ விதியாலோ நமது வாழ்க்கை ஆளப்படுவதில்லை; அது தேவனின் கிருபையுள்ள கர்த்தத்துவத்தாலே ஆளப்படுகிறது. Que Sara, Sera … whatever will be will be என்ற ஆங்கிலப் பாடல் பிரபலமானது. அது கேட்பதற்கு இனிமையானது; ஆனால் தேவ வார்த்தையை பொறுத்தவரை அது உண்மையல்ல! ஒரு கடிகார விற்பனையாளர் நுணுக்கத்தோடு ஒரு கடிகாரத்தை உருவாக்கி, அதற்கு முடுக்கி விட்டு, ஒரு பேழையில் வைத்து ஓடவிட்டுச் சென்றுவிடுவதைப் போல நம் தேவன் செல்வதில்லை. நம் வாழ்வின் அனைத்துக் காரியங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர், தீமை நம்மை அணுகாமல் நம்மைச்சுற்றி ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தை வைப்பவர் என்று வேதமும் அவரைக்குறித்துக் கூறவில்லை. மாறாக, நம் வாழ்க்கைக்கென நல்ல திட்டத்தை வைத்து, தனிமனித சுதந்தரத்தைப் பாதிக்காமல், திட்டத்தை அற்புதமாக நிறைவேறவும் செய்பவர் என்று கூறுகிறது. தேவன் அன்புள்ள தகப்பனாய், நம் சந்தோஷத்தை, நம் மனமடிவைப் பகிர்ந்து கொள்கிறாரே தவிர, நமக்கு நேருகின்றவற்றைக் கையாண்டு, தமது கட்டுப்பாட்டுக்குள் அவர் வைப்பதில்லை.  


அன்பானவர்களே, நமக்கென திட்டம் வைத்திருப்பவர் மட்டுமல்ல நம் தேவன்; நமக்கு நேருகின்ற நன்மை தீமை எல்லாவற்றிலும் அவர் செயலாற்றுகிறார் என்றும் அறிந்து தேறுதல் அடைவோம். வியாதி, பொருளாதாரப் பிரச்சனைகள் ஏன் வருகின்றன, அல்லது சிறந்த முயற்சியெடுத்தும் ஏன் தோல்வியடைகிறோம் என்பது நமக்குப் புரியாதிருக்கலாம். ஆனால், நமக்கு ஏற்படுகிற சகலத்தையும் நன்மைக்கேதுவாக மாற்றுகிறார் தேவன் என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. இப்படிப்பட்ட காரியங்கள் நமக்கு நேரும்போது, தேவன் எங்கே இருந்தார் என்று நாம் கேள்வியெழுப்புகிறோம். ஒன்று மட்டும் நிச்சயம் - அனைத்தையும் அழகாய் முடித்துத் தரும்படி தேவன் செயலாற்றுகிறார்! ஆகவே நாம் சந்தோஷமடைவோம்; தேவன்மேல் நம்பிக்கைகொண்டிருக்கும் நாம் இறுதியில் ஜெயம் பெறுவோம்! நிச்சயம் நாம் பாதிப்படையாமல், வெற்றிவாகை சூடுவோம்!


ஜெபம்: ஆண்டவரே, என் துன்ப வேளையில் நீர் என்னை கைவிட்டீரோ, என்மீது அக்கறையின்றி இருக்கிறீரோ என்று நான் குழம்பாதிருக்க உதவும். அன்பின் தகப்பனாய் என் ஏற்ற இறக்கங்களைக் கவனித்து, சகலத்தையும் நன்மைக்கென எனக்காக நீர் மாற்றுகிறீர். எனவே, முடிவில் நான் ஜெயம் பெறுவேன்.  ஆமென்

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page