top of page

திங்கள், ஜனவரி 06 || தெளிதேன் துளிகள்

வாசிக்க: மல்கியா 3: 1-4


அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக வெளிவருவேன்


... அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போல ... இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்...  - மல்கியா 3:2,3


வெள்ளியை அழிப்பதற்காக அல்ல, அதை சுத்திகரிக்க புடமிடுகிற ஒருவனுக்கு இயேசு இங்கே ஒப்பிடப்படுகிறார் - அவர் தம்முடைய ஜனமான இஸ்ரவேலை அழிக்கமாட்டார், அவர்களைச் சுத்திகரிப்பார். புடமிடுகிறவன் உலோகங்களை உருக்கப் பயன்படுகின்ற பாத்திரம் ஒன்றில் புடமிடப்படாத வெள்ளி உலோகத்தை வைத்து, அதை அதிக சூடுள்ள உலையில் போடுவான். அன்றைய நாட்களில் வெள்ளி உலோகம் உருக்கப்படும்போது, தான் புடமிடுகின்ற உலைக்கு முன்பாக பொற்கொல்லன் உட்கார்ந்து, உலோகத்தின் நிறம் மாறுகிறதா என்று கவனமாகப் பார்த்துக்கொண்டிருப்பான். உலோகம் உருகும்போது பிராண வாயுவை வெளிவிடும். சூடு தணிகையில் மறுபடியும் உலோகம் வாயுவை எடுத்துக்கொள்ளும். அதைத் தடுப்பதற்காக அவன் அதன்மேல் கரியைப் போடுவான். மறுபடி வாயுவை வெள்ளி எடுத்துக்கொண்டால் அது தன் பளபளப்பை இழந்துவிடும். இந்த வெள்ளி திரவ நிலையில் இருக்கும்போது அதிலுள்ள கசடுகள் மேலே எழும்பி வரும். பொற்கொல்லன் அந்தக் களிம்பை நீக்கிவிடுவான். பிறகு வெள்ளி திடீரென திரவக் கண்ணாடி போலாகும்; பொற்கொல்லன் தன் முகத்தை அதில் பார்ப்பான். அப்போதுதான் இந்த சுத்திகரிப்புமுறை முடிவடையும்! கிறிஸ்து இயேசுவின் மகிமை மற்றும் அழகை நாம் பிரதிபலிக்கும் வரையில் நம் ஆண்டவரும் நம்மை பாடுகள் என்கின்ற உலைக்களத்தில் போடுவார். தேவன் பயன்படுத்தும் கருவிகளில் ஒன்று பாடு - கிறிஸ்துவுக்கொப்பாய் நம்மை உருவாக்கி, மறுரூபமாக்க தேவன் பாடுகளை பயன்படுத்துவார்! தமது பிள்ளைகள் உடன்படிக்கையை மீறி வழிதவறும்போது, அவர்களை தேடிப்பிடித்து புடமிடுவார் கர்த்தர். (எரேமியா 9:7) உபத்திரவத்தின் உலைக்களத்திலே அவர்களைச் சோதிப்பார்! 

அன்பானவர்களே, தம்முடைய சொந்த ஜனங்களை உலைக்களத்தில் இடும்போது, எவ்வளவு நேரம் எந்த அளவு அங்கே அவர்கள் இருக்கவேண்டும் என்பதை அவர் அறிவார். அவரிடம் நம்மை நாம் சமர்ப்பித்த பிறகு, அதற்குமேல் ஒரு நிமிடம்கூட பாடனுபவிக்க அவர் விடமாட்டார். அதற்கு முக்கியமான காரியம் - அவர் நமக்குக் கற்பிக்க விரும்பும் பாடத்தை நாம் கவனமாய் கற்கவேண்டியதே!
ஜெபம்: ஆண்டவரே, நான் சோதனைக்குட்படும்போது உமக்கெதிராய் கலகம் பண்ணாதிருப்பேன். என்னிலுள்ள களிம்பு கசடை நீக்கி சுத்தமாக்கி, உம் மகிமையை நான் பிரதிபலிக்கவே என்னைப் புடமிடுகிறீர்  என்பதை நினைவில் வைக்க, என் விசுவாசத்தில் நான் உறுதியாயிருக்க கிருபை தாரும்.  ஆமென். 

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
bottom of page