ஞாயிறு, மார்ச் 30 || உங்கள் உள்ளத்தில் கோபத்தை வைக்காதிருங்கள்!
- Honey Drops for Every Soul
- Mar 30
- 1 min read
வாசிக்க: மத்தேயு 5: 21-26
.. தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்... - மத்தேயு 5:22
இன்றைய வேதப்பகுதியில் கூறப்பட்டிருக்கும் மனுஷன் காரணமின்றி கோபப்பட்டான். பிறகு இந்த கோபம் தடிப்பான மூடனே என்ற வார்த்தையாக வெளிப்பட்டது. மூடனே என்ற வார்த்தைக்கு மதியற்றவனே, முட்டாளே என்று அர்த்தம். இந்த வார்த்தையை சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருக்கிறான் என்று வேதவசனம் சொல்கிறது. 1 யோவான் 3:15, ஒருவரை நாம் சரீரப்பிரகாரமாகக் கொலை செய்யாவிட்டாலும், நம் உள்ளத்தில் வெறுப்போமானால், அது அவரைக் கொலை செய்துவிட்டதற்கு சமானமாயிருக்கிறது என்று கூறுகிறது. ஆண்டவர் இயேசு கோபம் கொலைக்குச் சமம் என்று கூறாமல் கோபம்கொள்வதே கொலை செய்வதுதான் என்று கூறினார். எனவேதான், இயேசுவின் போதனைகள், பத்துக் கட்டளைகளைக் காட்டிலும் கடைப்பிடிப்பதற்கு கடினமானவையாய் இருக்கின்றன.
அன்பானவர்களே, கோபம் என்பது ஒரு ஞானமற்ற காரியமாயிருக்கிறது. அது நம்மைக் கட்டுகிறவர்களாக்குவதற்கு பதில் இடித்துப்போடுகிறவர்களாக மாற்றிவிடுகிறது. நமது சுயாதீனத்தை இழந்துபோனவர்களாக நம்மை மாற்றி அடிமைத்தனத்திற்குள் தள்ளிவிடுகிறது. எனவே, கோபம் பாவமாக மாறுவதற்குள் நாம் அதை விட்டொழித்துவிட்டு, நமது ஆண்டவரின் கிருபையைப் பெற்று சாந்தமாக வாழமுயற்சிப்போம். நாம் அடிமைத்தனத்திற்குள் கிடப்பது ஆண்டவருடைய விருப்பமன்று. இப்படிப்பட்ட கோபத்திலிருந்து பரிசுத்த ஆவியானவர்தாமே நம் ஒவ்வொருவருக்கும் விடுதலை தந்து அவர் தரும் உன்னத சுயாதீனத்துடன் ஜீவிக்க உதவி செய்வாராக!
ஜெபம்: தேவனே, அனுதினமும் கோபத்தைத் தூண்டும் சந்தர்ப்பங்கள் வந்தாலும் அமைதலோடிருந்து கோபத்தைத் தவிர்த்து வாழும் கிருபையை எனக்கு தாரும். அதற்கடுத்தபடியான கோபத்துடன் கத்துகிற நிலைக்குப் போகாமல் இருக்க உதவி செய்யும். உடனே ஒப்புரவாகக் கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments