top of page

ஞாயிறு, நவம்பர் 24 || தெளிதேன் துளிகள்

வாசிக்க:  ரோமர் 8:31-39


வாழ்வின் சவால்களை இயேசுவின் உதவியோடு சந்தியுங்கள்!


.. உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.

-  மத்தேயு 28:20


தாங்கள் கிறிஸ்தவர்களாகிவிட்டால் தங்களுடைய பிரச்சனைகள் தீர்ந்துபோகும் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில், கிறிஸ்தவர்களாயிருப்பதோ அல்லது கிறிஸ்தவர்களாய் மாறுவதாலோ பிரச்சனையற்ற வாழ்வுக்கு உத்தரவாதம் தரமுடியாது. அப்போஸ்தலனாகிய பவுல், கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்தவராயிருந்தும், அடிக்கடி பாடுகளினூடே கடந்துசென்றார். ஆனால், பாடுகளின் மத்தியிலும் அவர் நமக்கு உதவி செய்து நம்மைப் பலப்படுத்தி, கடினமான சூழ்நிலைகளை சமாளிக்கத் தேவையான ஞானத்தை அவர் தருகிறார். ஏசாயா 43:1,2,5ல், பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜூவாலை உன்பேரில் பற்றாது. பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன் என்று அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார். அடுத்ததாக, நம் வாழ்வில் புயல் வீசும்போதும் அவர் நமக்கு சமாதானத்தைத் தருகிறார். நமது எதிர்காலம் அவரது கரத்தில்தான் இருக்கிறது என்று நாம் அறியும்போது நமது கவலைகளை விட்டொழித்து சமாதானத்துடன் ஜீவிக்கிறோம். பிலிப்பியர் 4:6,7, நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் என்று கூறுகிறது. இறுதியாக, இயேசுவை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுவிட்டால், நமது வாழ்வில் கஷ்டங்கள் நேர்ந்தாலும் அவர் நமக்கு உதவி செய்து ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உண்டுபண்ணுகிறார்.


நண்பர்களே, கிறிஸ்தவம் ஒரு மலர்ப்படுக்கை என்று யாராவது கூறினால் அதை நம்பவேண்டாம். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்று ஆண்டவர் இயேசு சொன்னதை நினைவில் கொண்டு, நாமும் ஜெயிப்போம் என்ற உறுதியுடன முன்னேறுவோம். அவர் நம்மோடு இருந்து நமக்கு உதவி செய்வார்.

ஜெபம்: ஆண்டவரே, கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு ரோஜாமலர்ப் படுக்கை என்று என்னை நான் ஏமாற்றிக்கொள்ளாமல், நான் அநேக பாடுகளினூடேதான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் என்றும், அதுவரை நீர் எனக்கு உதவிசெய்து நடத்துவீர் என்றும் விசுவாசிக்க கிருபை தாரும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Opmerkingen

Beoordeeld met 0 uit 5 sterren.
Nog geen beoordelingen

Voeg een beoordeling toe
bottom of page