top of page

ஞாயிறு, நவம்பர் 03 தெளிதேன் துளிகள்

வாசிக்க: எஸ்றா 8:15, 21-23 தெளிதேன் துளிகள்

எஸ்றாவின் பாராட்டத்தக்க விசுவாசம்

என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடேகூட வரும்படி சேர்த்துக்கொண்டேன். (எஸ்றா 7:28)

பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பின யூதருடைய இரண்டாம் குழுவிலுள்ள ஆண்கள், பெண்கள், பிள்ளைகளை எஸ்றா எருசலேமுக்கு நடத்தினான். எருசலேமிலுள்ள தேவாலயத்துக்காக வெள்ளியையும் பொன்னையும் எடுத்துச்செல்லவேண்டிய மாபெரும் பொறுப்பு எஸ்றாவுக்கு இருந்தது. ஆபத்துநிறைந்த தேசங்களில் நான்கு மாத கடினமான பயணத்தை இவர்கள் மேற்கொள்ளவேண்டும். ஒவ்வொரு தேசத்திலும் அவர்களறியாத ஆபத்துக்களை, தீய மனுஷரை, அவர்களுக்குப் பரிச்சயமில்லாத காரியங்களை அவர்கள் சந்திக்கலாம். கொடுமையான திருடர் கூட்டம் கழுகுகள்போல் அவர்கள்மேல் எளிதாக இறங்கி, எடுத்துச்சென்ற அனைத்துப் பொக்கிஷங்களையும் அள்ளிச் செல்லலாம். ஆகவே, வழியில் தங்களைப் பாதுகாக்க ராஜா படைவீரர்களை அனுப்பவேண்டுமென்று ராஜாவிடம் கேட்பதுதான் எல்லாருக்கும் இயல்பாக ஏற்படும் உள்ளுணர்வு! ஆனால், வழியிலே தங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களைப் பாதுகாப்பார் என்று ராஜாவிடம் தான் தைரியமாகப் பேசின தன் வார்த்தையைத் தான் காப்பாற்றவேண்டுமே என்று எண்ணினான் எஸ்றா. வனாந்தரப் பயணத்துக்கு முன்பு, அகாவா நதிக்கரையில் மூன்று நாட்கள் தன் மக்களோடுகூட தங்கினான்; அங்கே உபவாசமிருந்து தேவனிடம் விண்ணப்பம்பண்ணி தேவனின் கரங்களில் தங்களை ஒப்புவித்தான். எங்கள் தேவனுடைய கரம் என்ற சொற்றொடர் எஸ்றா

புத்தகத்தில் பலமுறை வருகிறது. தேவனுடைய கரமாகிய பலத்த கேடகத்துக்குள் சகல ஆபத்திலிருந்து தப்பி, பாதுகாப்புடன் ஒருவரால் இருக்கமுடியும். மெல்லிய இறக்கைகளுள்ள பட்டுப்பூச்சியை ஒரு குழந்தை தன் கரங்களைக் குவித்து, இறக்கை கிழிந்துபோகாமல் மென்மையாக பத்திரமாக சுமப்பதுபோல பலவீனமான, பாதுகாப்பற்ற நம்மை ஆண்டவர் தமது குவிந்த கரத்துக்குள் பத்திரமாக சுமக்கிறார்! தன் குழந்தையின் சின்ன விரல்களை தகப்பன் பலமுள்ள கரத்துக்குள் வைத்துப் பாதுகாப்பதைப்போல நம் தேவன் தம் கரத்தை நம்மேல் வைத்து, பலமும் பாதுகாப்பும் அளிக்கிறார். இதுவே எஸ்றாவின் விசுவாசம். இதுவே இன்று நம் விசுவாசமாகட்டும்.


அன்பானவர்களே, நமது நம்பிக்கை பொருட்கள் அல்லது மக்கள்மேல் இல்லாது, தேவன்மேல் இருக்கட்டும்; அவரிடம் கொடுப்பதை அவர் பாதுகாப்பார் என்ற நிச்சயத்துடன் நம்மை முழுவதும் அவரிடம் கொடுப்போம்.        

ஜெபம்: ஆண்டவரே, உம்மேல் முழுதும் சாரும்படி, நான் வெளிப்புற உதவிகளை உதறிவிட்டு, முழுமையாய் உம்மிடம் மட்டுமே சரணடைவேன். உம் உதவியையே இக்கட்டான சூழ்நிலையிலும் நாட, எஸ்றாவின் விசுவாசம் என்னிலிருக்கட்டும். உமது கரம் என்மேல் அமர்ந்து, பாதுகாப்புடன் என்னை வழிநடத்தட்டும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Commenti

Valutazione 0 stelle su 5.
Non ci sono ancora valutazioni

Aggiungi una valutazione
bottom of page