வாசிக்க: சாமுவேல் 17:40-52
யேகோவா சபாவோத்! சேனைகளின் கர்த்தர்!!
கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள். (யாத்திராகமம் 14:14)
இஸ்ரவேலர் எகிப்தை விட்டுப் போனதை பார்வோன் கண்டபோது, அவன் இருதயம் கடினப்பட்டு, தனது சேனையோடு அவர்களைப் பிடிக்கப் பின்தொடர்ந்தான். அதைக்கண்ட இஸ்ரவேலர் மிகவும் பயந்துபோனார்கள். அந்த சமயத்தில்தான், பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் நீங்கள் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள். (யாத்திராகமம் 14:13,14) என்று கர்த்தர் வாக்குப்பண்ணினார். சொன்னபடியே, அவர் யுத்தம் செய்தார். எகிப்தியரின் இரதங்களின் சக்கரங்கள் கழன்றுவிழும்படி செய்து, அவர்களின் சேனையைக் கடலில் மூழ்கடித்தார். வேறு ஒரு சம்பவத்தில், எமோரியர், யோசுவாவுக்கும், இஸ்ரவேலருக்கும் விரோதமாக வந்தபோது, தேவன் எமோரியரைக் கலங்கப்பண்ணி, அவர்கள்மேல் கல்மழையைப் பெய்யப்பண்ணி, இஸ்ரவேலின் மனுஷரால் கொல்லப்பட்டவர்களைப் பார்க்கிலும் அதிகமான பேரைச் சாகடித்தார். யோசுவா, சூரியனே, நீ கிபியோனின்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் தரித்துநில்லுங்கள் என்றபோது, எதிரிகள் முறிந்துவிழும்வரை அவை தரித்துநின்றன. (யோசுவா 10:12,13) தமது மக்களுக்காக, இயற்கைக்கு அப்பாற்பட்டவிதத்தில், தேவன் செயலாற்றிய வேறு அநேக சம்பவங்களும் வேதத்தில் எழுதப்பட்டுள்ளன.
அன்பானவர்களே, நாம் தமது யுத்தங்களைக் கர்த்தரின் கரங்களில் ஒப்புக்கொடுத்தால் அவர் யேகோவா சபாவோத்தாக இருந்து, சேனைகளின் கர்த்தராய் நமக்காக யுத்தம் பண்ணி நமது எதிரிகளை மடங்கடித்து வெற்றியைத் தருவார். நாம் செய்யவேண்டியதெல்லாம் அவரை நம்பி, அமைதியாக இருந்து, அவரது வல்லமை செயல்படுவதைக் காணவேண்டியது மட்டுமே!
ஜெபம்: பரமனே, மனுஷரோ, பிசாசோ எனக்கு எதிர்த்துவரும்போதெல்லாம் நான் கலங்காமல், யேகோவா சபாவோத், சேனைகளின் கர்த்தர் என்னோடிருக்கிறீர் என்பதை உணர்ந்து உம்மாலே அவர்களை மேற்கொள்ள உதவும். நீரே எனக்காக யுத்தம் செய்பவர். உமது வல்லமை மற்றும் பராக்கிரமத்திற்காக நன்றி. ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments