சனி, மார்ச் 22 || உபவாசமும் ஜெபமும்!
- Honey Drops for Every Soul
- Mar 22
- 1 min read
வாசிக்க: ஏசாயா 58: 5-9
... நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம் பண்ணினீர்கள்?
- சகரியா 7: 5
மூன்றுவித உபவாசங்கள் உள்ளன. முதல் வித உபவாசம், தண்ணீரைத் தவிர வேறு எந்த திட மற்றும் திரவ உணவையும் அருந்தாமல் ஜெபிப்பது. இதைத்தான் இயேசு வனாந்தர சோதனையின்போது நாற்பது நாட்கள் மேற்கொண்டார் என்று வேத அறிஞர்கள் கூறுகின்றனர். இரண்டாவது வகை, எதையுமே உண்ணாமலும் அருந்தாமலும் இருப்பதாகும். மோசே சீனாய் மலையின்மீது கர்த்தருடைய சமுகத்தில் காத்திருந்தபோது, நாற்பது நாட்கள் ஒன்றுமே புசியாமலும் குடியாமலும் இருந்தது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்று! இந்த ஒருமுறை மாத்திரமல்ல, இரண்டுமுறை அப்படி இருந்தார் மோசே! மோசேயின் இந்த எண்பது நாள் உபவாசமே வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் நீண்டநாள் உபவாசம். மூன்றாவதாக குறிப்பிடப்பட்டுள்ள உபவாசம் முழு உபவாசமல்ல; சாத்ராக், மேஷாக், ஆபெத்நேகோ, தானியேல் நால்வரும் ராஜபோஜனத்தையும், திராட்சரசத்தையும் தவிர்த்து, வெறும் காய்கறிகளையும் தண்ணீரையுமே அருந்தினார்கள்.
அன்பானவர்களே, இவ்வகை உபவாசத்தில் ஏதாவது ஒன்றை நாம் அனுசரித்து ஜெபிப்பது மிகுந்த பலனைக் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை. ஆனால், எந்தவகை உபவாசமானாலும் அது நமது சுயத்துக்காக செய்யப்படுகிறதாக இல்லாமல், கர்த்தருக்கு மகிமை கொண்டுவருவதாக இருக்கவேண்டும். கர்த்தருக்கு சேவைசெய்யவும், அவரைக் கனப்படுத்தவும், அவரது சித்தத்தை அறிந்து செயல்படவும் உபவாசத்தை நாம் கடைப்பிடிப்பதுதான் அவருக்குப் பிரியமானது. இதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது.
ஜெபம்: தேவனே, உபவாசித்து ஜெபிக்க முடிவெடுத்திருக்கும் நான் ஆவியானவர் ஏவுகிறபடி, வேதத்தின் அடிப்படையில் எனது நோக்கத்தைச் சரியாக வைத்துக்கொண்டு, உபவாசத்தை மேற்கொண்டு ஜெபிக்க கிருபை தாரும். வகை எதுவாயினும், உபவாசம் உமக்குகந்ததாக இருப்பதாக. ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comentários