சனி, மார்ச் 01 || உற்சாகமூட்டும் ஒரு வார்த்தை அற்புதத்தைக் கொண்டுவரும்
- Honey Drops for Every Soul
- Mar 1
- 1 min read
வாசிக்க: சங்கீதம் 34: 1-6
தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள் ... என்று சொல்லுங்கள். - ஏசாயா 35 : 3, 4
கி.மு 722ல் அசீரியர் சிறைப்பிடித்துக் கொண்டுபோன இஸ்ரவேலின் வடதிசைக் கோத்திரங்களோடு ஏசாயா இங்கே பேசுகிறார். இந்த யூத ஜனங்கள் மனமடிவாகி, நம்பிக்கையற்றுப் போயிருந்தனர். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பதிலாக நீதியைச் சரிக்கட்ட தேவன் வருவார் என்று சொல்லி ஏசாயா அவர்களை உற்சாகப்படுத்தினான். அவர்கள் எதிரிகளால் பயமுறுத்தப்பட்டார்கள். தங்கள் தேசத்துக்கு திரும்பவும் வந்து, சமாதானமாய் வாழ வாய்ப்பே இல்லை என்று அவர்களுக்குத் தோன்றிற்று. அவர்கள் விரக்தியும், மனச்சோர்வுமடைந்து, விட்டுக்கொடுக்கத் தயாராயிருந்தனர். எனவே, தேவனுடைய ராஜ்யம் வரப்போகிறது; அப்போது, வனாந்தரம் களித்து புஷ்பத்தைப்போலச் செழிக்கும் என்றும், அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள் என்றும் அவர்களுக்கு நினைவூட்டினான் ஏசாயா. (ஏசாயா 35:1,2) பிறகு, தளர்ந்தவர்களைத் திடப்படுத்தவும், தள்ளாடுபவர்களைப் பலப்படுத்தவும் அவர்களுக்கு அவன் ஆலோசனை சொன்னான். வேறு வார்த்தையில் சொன்னால், இப்போது விட்டுக்கொடுக்காதீர்கள். நன்மையான நாள் ஒன்று வரப்போகிறது. அதை எதிர்பாருங்கள்; அப்போது நீங்கள் ஊக்கமடைந்து, தேவையான பலத்தை அடைவீர்கள், ஜெயம் வந்துகொண்டிருக்கிறது! என்று அவர்களுக்கு ஏசாயா கூறினான்.
அன்பானவர்களே, விரக்தி, பலவீனம் தருகின்ற சூழ்நிலையை நாம் சந்திக்கும்போது, நாம் பார்க்கவேண்டிய ஆச்சரியமான வார்த்தை ஒன்று உண்டு: நமது கைகளைத் திடப்படுத்தாமல், நமது கால்களைப் பலப்படுத்தாமல், எவர்களுடைய கைகள் தளர்ந்திருக்கிறதோ, கால்கள் தள்ளாடுகிறதோ அவர்களைத் திடப்படுத்த, பலப்படுத்தச் சொல்கிறார் கர்த்தர். வேறுவிதத்தில் சொன்னால் - நம் சொந்த பலவீனங்களில் கவனம் செலுத்தாது, மற்ற கிறிஸ்தவர்களின் பலவீனங்களை நாம் திடப்படுத்த வேண்டும். வலி, துன்பம் அனுபவிக்கின்ற ஒருவரை உற்சாகப் படுத்துவதுதான் நம்மை ஊக்குவிக்க சரியான வழி. அதாவது, கிருபை, வல்லமை, விடுதலை குறித்த சத்தியத்தைப் பேசினால் அவர்களையும், நம்மையும் ஊக்கப்படுத்துவோம்! மற்றவர்கள் நமக்கு என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நாமும் அவர்களுக்குச் செய்வோம். (மத்தேயு 7:12)
ஜெபம்: பரம பிதாவே, சிலவேளை உருக்கத்தை, இரக்கத்தை உம்மோடு அல்ல, உமது குமாரன் இயேசுவோடு இணையாக்குவேன். இன்று வேதவசனத்தை நினைவுபடுத்தி, உம் அன்பும் பலமுறை வெளிப்படுவதை விளக்கினீர். நான் கிருபாசனத்தண்டை தைரியமாக வந்து, தயவுக்காக காத்திருப்பேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments