top of page

சனி, ஏப்ரல் 05 || சிறு பிள்ளைகளுக்கு உதவும் இருதயம் (2)


வாசிக்க: உபாகமம் 6: 6-9



இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். சங்கீதம் 127:4



பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பைப்பற்றி வேதம் கற்பிப்பதை இன்றைக்கு தொடர்ந்து தியானிப்போம்.


மூன்றாவதாக, பாதுகாப்பு அளித்தல். உன் வழிகளிளெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காக தம்முடைய தூதர்களுக்கு கட்டளையிடுவார் என்று சங்கீதம் 91:11 கூறுகிறது. இந்த வசனம், தமது பிள்ளைகளை சரீரப்பிரகாரமாகவும், ஆவிக்குரிய விதத்திலும் ஆண்டவர் பாதுகாக்கிறார் என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. நம்முடைய பிள்ளைகள் வீடுகளிலோ, சமுதாயத்திலோ அல்லது பள்ளிகளிலோ அவர்கள் எங்கிருந்தாலும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்பதை தேவனின் அன்பை அவர்களுக்கு பிரதிபலிப்பதின்மூலம் உறுதிசெய்யலாம். நான்காவதாக, கற்றுத்தருதலும் உற்சாகப்படுத்துதலும்: நம் பிள்ளைகளுக்கு தினமும் நாம் வேதவசனத்தைக் கற்பிக்கவேண்டும் என்று உபாகமம் 6:6,7 உற்சாகப்படுத்துகிறது: இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப்போதித்து, வீட்டில் உட்கார்ந்திருக்கும்போதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கும்போதும் அவைகளைக் குறித்துப் பேசு என்று கூறுகிறது. தேவனை, அவரது அன்பை, அவரது வழிகளை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கிற கடமை நமக்கு உண்டு. இந்தக் கற்பித்தல், அமைப்பு சாரா முறையில் மட்டுமல்ல, வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் நடைபெறட்டும். 


அன்பானவர்களே, இன்று பிள்ளைகளுக்கு எவ்வாறு நான் உதவலாம்? என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். ஆறுதலும், வழிகாட்டுதலும் தேவைப்படும் பிள்ளை ஒருவேளை உங்கள் வாழ்விலும் இருக்கலாம். அல்லது தாங்கள் சொல்வதைக் கவனிக்கக்கூடிய ஒருவரை அவர்கள் நாடலாம். பிள்ளைகள் நமது மாதிரியின்படியே கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நினைவில் வைப்போம். இரக்கம், பொறுமை, அன்பு இவற்றை நம் வாழ்க்கையிலே வெளிக்காட்டி அவர்களுக்கு கற்பிக்கலாம். பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுப்பதால், அவர்களோடிருக்க நேரம் கொடுப்பதால், அவர்களுக்காக ஜெபிப்பதால், இதுபோன்ற எண்ணற்ற விதங்களால் அருகிலுள்ள பிள்ளைகளுக்கு நாம் ஊழியம்செய்து அவர்களைத் தாங்கலாம். பிள்ளைகள்மீது தேவ அன்பை நாம் பிரதிபலிக்கையில், பிள்ளைகள் வாழ்வில் அவர்களது கரங்களாக, பாதங்களாக நாம் இருக்க தேவன் அழைக்கிறார் என்பதை நாம் நினைவில் வைக்கவேண்டும். பிள்ளைகளுக்கு உதவும்போது, தேவனை கனம் பண்ணுகிறோம், அவரது கட்டளைகளை நிறைவேற்றுகிறோம். தேவன் நம்மை ஆதரிப்பதைப்போலவே நம் வாழ்வில் அவர் கொடுத்திருக்கும் பிள்ளைகள்மேலே நாம் அக்கறைகொள்வோம். 
ஜெபம்: தேவனே, என் பிள்ளைகளுக்கு அன்பையும், இரக்கத்தையும் கற்பிக்க எனக்கு உதவும். உம் வழிகளை அவர்களுக்குக் கற்பிக்க எனக்கு ஞானம் தாரும். நான் நற்குணங்களுடன் வாழ்ந்து, இவர்களுக்கு உலகில் ஒளியாயிருக்க உதவும். என் வாழ்க்கை அவர்களுக்கு முன்மாதிரியாக அமையட்டும். ஆமென். 



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page