செவ்வாய், மார்ச் 25 || கர்த்தரின் மகத்துவமான மகிமை!
- Honey Drops for Every Soul
- Mar 25
- 1 min read
வாசிக்க: லேவியராகமம் 16
கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கக்கூடாமல் இருந்தது. - யாத்திராகமம் 40:35
பழைய ஏற்பாட்டின் காலத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பிரதான ஆசாரியன் மகாபரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து, முழு இஸ்ரவேலுக்குமான பாவநிவாரண பலியைச் செலுத்துவான். கர்த்தர் பரிசுத்தர், மனிதகுலமோ பரிசுத்தமற்றது என்றும், பரிசுத்தக் குலைச்சலானது எதுவும் மறைக்கப்படாத கர்த்தரின் மகிமைக்கு முன்னால் அழிந்துபோகும் என்பதும் அந்த ஆசாரியனுக்குத் தெரிந்த விஷயம். எனவே, அவன் திரைக்குள் பிரவேசிக்கும் முன்னால் தான் வெளியே வருவது நிச்சயம்தானா என்ற சந்தேகத்துடன்தான் நுழைவான். அவன் பலியான ஆட்டின் ரத்தத்தை எடுத்து தன் காது மடல்களிலும். கைப் பெருவிரல்களிலும், கால் பெருவிரல்களிலும் தடவிக்கொள்வான். அப்படியிருந்தும் ஒருவேளை தான் உள்ளே மரித்துப்போக நேரிட்டால் தன்னை வெளியே இழுப்பதற்காக தன் கணுக்காலைச் சுற்றி ஒரு கயிறையும் கட்டிக்கொண்டுதான் உட்பிரவேசிப்பான். நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட சுகந்தவர்க்கத்தை கைநிறைய எடுத்து அதில் போடுவான். அதிலிருந்து கிளம்பும் சுகந்தமான புகையானது பார்வையை மறைக்குமளவிற்கு இருக்கும்படி பார்த்துக்கொள்வான். தான் கர்த்தருடைய முழுமையான மகிமையைக் காணக்கூடாதபடிக்கு ஜாக்கிரதையாய் இவற்றையெல்லாம் செய்வான்.
அன்பானவர்களே, இபபடிப்பட்ட மகிமையின் தேவனை நாம் சந்திக்கவேண்டுமென்றால் நம்மை நாமே இயேசுவின் இரத்தத்தால் கழுவி பரிசுத்தமாக்கிக்கொண்டுதான் பிரவேசிக்கவேண்டும். நாம் அவரது பிரசன்னமாகுதலை அசட்டை செய்யாமலிருப்போமாக.
ஜெபம்: பரம தகப்பனே, உமது மகிமைதான் எத்தனை மகத்துவமுள்ளது! அதை நான் அசட்டை செய்யாமல், பயபக்தியுடன் உம் பிரசன்னத்தில் வர கிருபை தாரும். நான் அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளை இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரித்து என்னைப் பரிசுத்தமாக்கி தகுதிப்படுத்தும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments