செவ்வாய், மார்ச் 18 || வார்த்தையாலும், ஆவியாலும் நிரப்பப்படுங்கள்; சோதனையை மேற்கொள்ளுங்கள்
- Honey Drops for Every Soul
- Mar 18
- 1 min read
வாசிக்க: மத்தேயு 4: 1-11
உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார். அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்(டார்)... - மாற்கு 1:12,13
நாற்பதுநாள் தொடர்ந்து சோதிக்கப்பட்டார் இயேசு என்று மாற்கு, லூக்கா சுவிசேஷங்கள் இரண்டிலும் நாம் வாசிக்கிறோம். இயேசு தொடர்ச்சியாக சோதிக்கப்பட்டும், சாத்தான் கடைசியாக கொண்டுவந்த சோதனைகள் மிகவும் மோசமானவை! இயேசுவுக்கு வந்த பரீட்சையானது புறம்பே இருந்து வந்தது, அது சோதிக்கிறவனிடத்திலிருந்தே வந்தது. (மத்தேயு 4:3) இயேசுவின் சோதனை நம்முடையதைவிட வித்தியாசமானது என்று காண்கிறோம். நம் சோதனை உள்ளிருந்தே வருகிறது - நம் தேவனற்ற நிலை, மீட்பு பெறாத சரீரம், ஆதாமின் பாவசுபாவத்திலிருந்து வருகிறது. சாத்தான் நம் மாம்சத்தை சோதனையால் தூண்டிவிடலாம், இது உண்மை என்றாலும், அது மட்டுமே காரணமல்ல. நம்மைச் சோதிக்க நம்முடைய மாம்சத்துக்கும் வல்லமை உண்டு. (ரோமர் 6:12,13) எனவே, அப்படிச் செய்ய என்னைத் தூண்டியது பிசாசுதான்! என்று நாம் எல்லா நாளும் சொல்லக்கூடாது. சோதிக்கப்படும் சமயத்தில் அதனை மேற்கொள்ள நமக்கு மிகவும் உதவுவது, இயேசுவோடு நாம் கொண்டிருக்கிற உறவும், அவர்போலவே ஆவியாலும், வார்த்தையாலும் நிரப்பப்படுவதுமே. சாத்தான் வைத்திருக்கின்ற மிக வல்லமையான ஆயுதம்கூட, ஆவியின் பட்டயமாம் தேவவசனத்துக்கு சற்றேனும் இணையாவதில்லை!
அன்பர்களே, சோதிக்கப்படுகின்ற வேளையில் நாம் செய்யவேண்டிய ஒரே காரியம் - இயேசுவின்மேல் நம் கண்களைப் பதிப்பதே! (எபிரெயர் 12:1) நீண்டநேரம் வனாந்தரத்தில் நாற்பதுநாள் சோதிக்கப்பட்டும், சாத்தானை வென்ற தேவகுமாரனை நாம் நோக்கிக்கொண்டே இருக்கவேண்டும். ஆவியினாலும் வார்ததையினாலும் அவர் யுத்தத்தை வென்றார் என்றால், இன்றைக்கும் இருக்கின்ற இயற்கைக்கப்பாற்பட்ட இந்த ஆதாரங்களை நாமும் பயன்படுத்தலாம் அல்லவா! நாமும் அனுதினமும் ஆவியினாலும் வார்த்தையினாலும் நிரம்பி, துணிந்து முன்னேறலாம். அப்படி செய்யாதிருந்தால் ஆவிக்குரிய ரீதியில், பிசாசின் தாக்குதலுக்கு நாம் உள்ளாவோம்.
ஜெபம்: ஆண்டவரே, உள்ளிருந்தோ, புறம்பேயிருந்தோ எனக்கு சோதனை வந்தால், பிசாசு நாற்பதுநாள் சோதித்தபோது, ஆவியாலும் வார்த்தையாலும் நிரம்பி அவனை ஜெயத்துடன் மேற்கொண்ட இயேசுவையே நான் நோக்குவேன். ஆவிக்குரிய ஆதாரங்களைக் கொண்டு பிசாசை நான் தோற்கடிப்பேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments