top of page

செவ்வாய், நவம்பர் 05 || தெளிதேன் துளிகள்

வாசிக்க: யோபு 29: 1-17 தெளிதேன் துளிகள்

யோபு - நாம் பின்பற்ற வேண்டிய ஒரு உதாரணம்

நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பி ... (தீத்து 2:7)

தன் பிள்ளைகளையும், தன் சுகத்தையும், சொத்துக்களையும் யோபு இழப்பதற்கு முன்பாக இருந்த நாட்களைவிட, தேவ பிரசன்னத்தை அதிகமாக உணர்ந்த நாட்களைக் காண்பதற்கு அதிகம் ஏங்கினான் யோபு. தனக்கு எதிராய் அல்ல தன் பட்சமாய் கர்த்தர் இருப்பதைப்போல் உணர்ந்த நாட்களை அதிகம் ஆசையுடன் நினைத்துப் பார்த்தான். எனவே, யோபுவின் மிகப் பெரிய நெருக்கடி நிலை, பின்னாட்களில் தேவனைக்குறித்த ஆவிக்குரிய இழப்பே! யோபு உணர்ந்த மிகப் பெரிய இழப்பு இன்னதென்பதை ஸ்பர்ஜன் கூறுகிறார் -

முதலில், தெய்வீக பராமரிப்பு தனக்கு இருக்கிறது என்ற உணர்வை இழந்தான். யோபு 29:2ல் அவன், சென்றுபோன மாதங்களி(ல்), தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்கள்... இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும் என்று கூறுகிறான்.

இரண்டாவது, தெய்வீக ஆறுதலை அவன் இழந்தான். தேவனின் வெளிச்சம் அவன் தலையின்மேல் பிரகாசித்ததால் ஆறுதலடைந்ததை 3ம் வசனத்தில் நினைவுகூர்ந்தான்.

மூன்றாவது, தெய்வீக வெளிச்சத்தை அவன் இழந்தான். தேவனது வெளிச்சத்தில் இருளைக் கடந்துபோனதால் வாழ்வின் பிரச்சனைகள் அவனை மருள வைக்கவில்லை என்றும் அவன் கூறினான்.

நான்காவது, தெய்வீக ஐக்கியத்தை யோபு இழந்தான். தேவன் கொண்டிருந்த நெருங்கிய ஐக்கியத்தினாலே தனது வீடு ஆசீர்வதிக்கப்பட்டது என்று அவன் 4ம் வசனத்தில் கூறுகிறான்.


தான் வசித்த சமுதாயம் தனக்கு அதிக மதிப்பும், மரியாதையும் தந்தது என்பதை யோபு நினைவுகூர்ந்தான். அவனுடைய ஞானமுள்ள வார்த்தைகளால் அவன் கௌரவம் பெற்றான். சக மனிதருக்கு அவன் செய்த நற்செயல்கள், அவனது பேராவலினாலோ அல்லது மக்கள் செல்வாக்கைப் பெருவதற்காகவோ செய்யப்படவில்லை; அதற்குக் காரணம், அவர்களுக்கு நீதியையும் இரக்கத்தையும் காண்பிக்கவேண்டுமே என்கின்ற அவனது கரிசனையும், சுத்த அன்புமே! தனக்குள்ள செல்வத்தையும், செல்வாக்கையும் சுயநலத்துக்காகவோ, பேராசைக்காகவோ தக்கவைக்காமல் நன்மை செய்வதற்காகவே பயன்படுத்தினான். அன்பானவர்களே, வசதியும் செல்வாக்கும் உள்ளவர்கள் சுயநலமாய் வாழாமல், வசதியற்ற மக்கள்மேல் கரிசனையும் அக்கறையும் கொண்டு உதவும்படி வாழவேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் - யோபு!

ஜெபம்: ஆண்டவரே, வேறெதையும்விட உம் பிரசன்னத்தை நான் நாடுவேன். எல்லாரின் நன்மைக்கென நான் நேசிக்க, கவனிக்க, சிறந்ததை நாட உதவும். பிரதிபலன் எதிர்பாராது நன்மை செய்ய என்னைப் பெலப்படுத்தும். யோபுவைப் போல நானும் பலருக்கு உம் நன்மையை எடுத்துச் செல்ல உதவும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page