top of page

செவ்வாய், டிசம்பர் 03 || தெளிதேன் துளிகள்

வாசிக்க: 1 கொரிந்தியர் 2:1-5



கிறிஸ்துவை, சிலுவையிலறையப்பட்ட அவரை மட்டுமே பேசுங்கள்


இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். - 1 கொரிந்தியர் 2:2


தெசலோனிக்கே,  அத்தேனே, ரோமாபுரி எதுவாயிருந்தும், பவுல் இயேசுகிறிஸ்து, சிலுவையிலறையப்பட்ட அவர் என்கின்ற ஒரே செய்தியையே பிரசங்கித்தார். இந்த அடிப்படைச் செய்தியிலிருந்து அவர் ஒருபோதும் பிறழாதிருந்தார். அவர் கூறியதை யாரும் கேட்காமலிருக்க முடியாது என்பது நிச்சயம். அப்படிப்பட்ட அவருடைய பிரசங்கத்தை நாம் மூன்றே சொற்களில் சுருக்கிவிடலாம் -‡ எளிமை, தெளிவு, தைரியம்! அவர் இயேசுகிறிஸ்து தம் சிலுவை மரணத்தில் செய்துமுடித்ததை தெளிவுடன் எளிமையாகச் சொன்னார். இந்த சத்தியத்தை அவர் தைரியத்துடன் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தார்.   


அன்பர்களே, இது நமக்குள்ள ஒரே ஒரு ஆணை. கிறிஸ்துவின் சீஷர்களான நாம் மனுஷருக்குரிய காரியங்களில் மட்டுமே நம்மை ஈடுபடுத்தக் கூடாது. விழுந்துபோன உலகத்தின் காரியங்களிலே பிடிபட்டுவிடக் கூடாது. நாம் பரலோகப் பணிக்கான அழைப்பைப் பெற்றவர்கள். பல கோடி மக்களிலே நம்மை இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை ஜனங்களுக்குச் சொல்வதற்குத் தெரிந்தெடுத்தார். எனவே நாம், தேவன் தமது குமாரன் இயேசுவின்மேல் நம்முடைய பாவங்களைச் சுமத்தினார்; அவரும் நாம் மரிக்கவேண்டிய  இடத்தில் தாமே நின்று, நமக்காகவே மரித்தார்; நமது தண்டனையை நமக்காக ஏற்பதற்கு நம்முடைய பாவங்களைச் சுமந்து, அதற்கான தண்டனையை தம்மேல் சுமந்தார். மூன்றாம் நாளில் அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து, தாம் சொன்னது அனைத்தும் உண்மை என்று நிரூபித்தார் என்ற செய்தியை தெளிவாக எளிமையாக, தைரியத்துடன் சொல்லவேண்டும். நாம் சொல்லாவிட்டால் வேறு யார்தான் சொல்லக்கூடும்!


ஜெபம்:  ஆண்டவரே, கிறிஸ்துவின் சிலுவையை மையப்படுத்தி, முக்கியமான சத்தியத்தை தன் போதகத்தின் கருப்பொருளாய் வைத்தான் பவுல். அவனைப்போல, இயேசு ஒருவரே பாவிகளை இரட்சிப்பவர் என்னும் நற்செய்தியை நாமும் தெளிவாய், எளிய விதத்தில், தைரியமாய் சொல்லி சாட்சி பகர்வோம்.  ஆமென்





தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page