செவ்வாய், ஜனவரி 21 || தெளிதேன் துளிகள்
- Honey Drops for Every Soul
- Jan 21
- 1 min read
நற்கிரியைகளின் மூலம் அன்பைக் காட்டுங்கள்!
உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக. - லேவியராகமம் 19:18
அன்பானவர்களே, வயதான ஒரு தாயார் தன்னால் இத்தனை ஆண்டுகளில் ஒரு ஆத்துமாவையும் இயேசுவிடம் நடத்த முடியவில்லையே என நினைத்து வருத்தமுற்றாள். ஒருநாள், தனது அன்பை வெளிப்படுத்த கர்த்தர் ஒரு கைப்பிரதியை வானத்திலிருந்து அனுப்பாமல், தமது நேச குமாரனை அனுப்பினார். அவர் மக்களை நேசித்து, அவர்களது வியாதிகளைக் குணமாக்கி, தமது கரிசனையை தன் நற்செயல்களால் வெளிப்படுத்தினார். இதுவே மெய்யான அன்பு என்று ஆவியானவர் அவளுக்கு வெளிப்படுத்தினார். சில நாட்கள் கழித்து அவளது வீட்டிற்கு எதிரே இருந்த வீட்டில் ஒரு குடும்பம் குடியேறியது. அன்று, இந்தத் தாயார் கொஞ்சம் பிஸ்கட்டுகள் மற்றும் தேநீர் எடுத்துச் சென்று அவர்களுக்குக் கொடுத்து, நீங்கள் இன்னமும் உங்கள் சாமான்களையே பிரித்திருக்கமாட்டீர்கள். அதனால் மதிய உணவும் நான் உங்களுக்காக ஆயத்தம் செய்கிறேன். இந்தப் பகுதியில் எதையாவது வாங்க விரும்பினால் இங்கிங்கே வாங்கலாம் என்றுகூறி, கூடவே சில சுவிசேஷக் கைப்பிரதிகளையும் கொடுத்தார். வேறு ஏதாவது உங்களுக்குத் தேவைப்பட்டால் தாராளமாகக் கேளுங்கள் என்று சொல்லிச் சென்றார். சற்று நேரத்தில் மதிய உணவு தந்தார். தான் என்ன நன்மைகளைக் கர்த்தரிடத்திலிருந்து பெற்றார் என்று சாட்சி சொன்னார். எந்தப் பிரசங்கமும் அவர் செய்யவில்லை. சில மாதங்களுக்குள் அந்தக் குடும்பம் கர்த்தருக்குள் வந்து ஞானஸ்நானம் எடுத்தார்கள்.
அன்பானவர்களே, இப்படி இயேசுவின் அன்பின் ஒளி நமது நற்செயல்களால் வெளிப்படும்போது அநேகர் அவரிடத்தில் வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஜெபம்: பரமனே, நான் என் நாவினால் அன்புகூராமல் எனது நற்செயல்களால் உமது அன்பை வெளிப்படுத்தி அநேகரை உம்மண்டைக்கு நடத்த கிருபை தாரும். இதுவரை, நான், என் குடும்பம் என்றே வாழ்ந்ததை மன்னியும். இனியாவது பிறரையும் நேசித்து அவர்களிடத்தில் நற்கிரியை நடப்பிக்க உதவும். ஆமென்.
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments