top of page

செவ்வாய், ஏப்ரல் 01 || சோதனைகளில் விசுவாசத்தைப் பற்றிக்கொள்ளுங்கள்


கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்... - ஏசாயா 61:1


தமது ஊழியத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தில் இயேசு இன்றைய வேதப்பகுதியை லூக்கா 4:18-19ல் மேற்கோளாகக் கூறினார். அது, அவரது அழைப்பு அபிஷேகத்தைக்குறித்த தீர்க்கதரிசன அறிக்கையாக இருந்தது. இன்றைக்கும் நமது வாழ்வில் மனதுருக்கமுள்ள தேவனாகிய அவர் வல்லமையாய்க் கிரியை செய்கிறார் என்பது நமக்கு அதிகமான உற்சாகத்தைத் தருகிறது! ஆவியில் எளிமையுள்ளவர்களாய் நாம் இருக்கையில், நமக்கும் சுவிசேஷத்தைப் பகிர்ந்தளிக்கிறார் அவர். அவர் நமது நொருங்குண்ட இருதயத்தைக் காயங்கட்டி, சிறைப்பட்ட நம்மை விடுதலையாக்கி, நம் கட்டுகளைக் கட்டவிழ்க்கிறார்; துயரப்படுகிற நம்மை அவர் ஆறுதல்படுத்தித் தேற்றுகிறார்; சாம்பலுக்குப் பதிலாக சிங்காரத்தையும், துயரத்துக்குப்பதிலாக ஆனந்தத் தைலத்தையும் தருகிறார்; ஒடுங்கின ஆவிக்குப்பதிலாக துதியின் உடையைத் தருகிறார்! இவற்றை அவர் தருவதற்கான காரணம் என்ன? நம்முடைய வாழ்வின் கடின நேரங்களில் அவர் கிரியை செய்து, நம்மைச் சுகப்படுத்தி, விடுதலையாக்கி, ஆறுதல் அளித்து, சிங்காரித்து, ஆனந்தத் துதியைத் தந்து, அவர் நாமத்தின் மகிமைக்கென்று நீதியின் விருட்சங்களாக நம்மை நாட்டுகிறார்!


இந்தக் கர்வாலி (Oak) மரங்களுக்கு திடமும் வலிமையும் உண்டு; இவை 200 ஆண்டுகளுக்கு மேலாக உயிரோடிருப்பவை. முதலில் இந்தக் கர்வாலி மரமானது ஒரு சிறிய விதையாகத்தான் இருந்தது; ஆனால், அதற்குள்ளே வளர்ந்து பெருகும் திறன் இருந்தது. அந்த விதை மண்ணிலே விழுந்து, அங்கிருந்து பெரிய கர்வாலி மரமாக வளர்ந்து, கொடுமையான வெப்பநிலையை, கொடூரமான பனியை, கடும் மழையை, கடும் வறட்சியை, பயங்கர புயலை, பெருங்காற்றைச் சந்தித்து, அவற்றினூடே நின்று, பிரதிகூல சூழ்நிலைகளைச் சகித்து, அதன் விளைவாக வலிமை வாய்ந்த ஒரு மரமாக வளர்ந்தது!

அன்பானவர்களே, நாம் சந்திக்கின்ற கடின சூழ்நிலைகளிலே, இவற்றையெல்லாம் நினைத்து ஊக்கமடைவோம். கர்த்தர் ஒருவரே நாம் கடக்கின்ற அனைத்துச் சூழ்நிலைகளையும் அறிந்திருப்பதால், நம்மையும் அவற்றிலிருந்து வெளியே கொண்டுவந்து, பலம்வாய்ந்த நீதியின் விருட்சங்களாக மாற்றி, அதன்மூலம் தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தவும் அவர் அறிந்திருக்கிறார்!
ஜெபம்: தேவனே, பார்வோனின் முரட்டாட்டம் எகிப்திற்குப் பேரழிவை உண்டாக்கியது என்று புரிந்துகொண்டேன். உமது வல்லமையான செயல்களைக் கண்டும் அவன் மனந்திரும்பவில்லை. நான் அப்படி இல்லாமல் உமக்கும் உமது வார்த்தைக்கும் எப்போதும் கீழ்ப்படிய கிருபை தாரும். ஆமென். 



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page