இன்னல்கள் நம்மைத் தாக்குகையில் என்ன செய்கிறோம்?
மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான். - யாத்திராகமம் 17:4
ரெவிதீமிலே இஸ்ரவேலர் பாளயமிறங்கினபோது, அங்கு அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது. அவர்கள் மோசேயிடம் வாதாடி, அவனுக்கெதிராக முறுமுறுத்தார்கள். அதற்கு மோசே செய்தது என்ன? உலக மக்கள் செய்வதைப் போல அவன் இஸ்ரவேலரோடு தர்க்கமிடாது, தேவனிடம் முறையிடுவதைத் தெரிந்துகொண்டான். உலகப்பிரகாரமாக ஒரு மனுஷன், நன்றியற்ற ஜனங்களே, உங்கள் வாய்களை மூடுங்கள்! என்று கூச்சல் போட்டிருப்பான். ஆனால் மோசே அப்படி செய்யவில்லை. மேலும், மோசேயிடம் சில நம்பிக்கைக்குரிய இஸ்ரவேலின் மூப்பர்களும் இருந்தார்கள். அவர்களிடம் சென்று ஆலோசனை கேட்டிருக்கலாம். ஆனால், அவன் முதலில் தேவனிடம் சென்றான். இஸ்ரவேலரைப் போல, தேவனை நம்பாதிருக்கக்கூடிய சோதனை மோசேக்கும் வந்திருக்கலாம். ஆனாலும், அவன் ஜெபம் செய்தான்! இடையூறுகள் சவால்களை எதிர்கொண்டபோதெல்லாம் மோசே தேவனிடம் வந்து, அவரின் வழிகாட்டுதலைக் கேட்டான். எதிர்பாராத பிரச்சனைகள் நமக்கு வந்தாலும், நாமும முதலில் தேவனிடத்தில் செல்லவேண்டும். நம்மால் சந்திக்கமுடியாத எந்தவொரு காரியத்தையும் தேவன் நம் வாழ்வில் அனுமதிப்பதில்லை என்பதை நாம் நினைவில் கொள்வோம். தம் பிள்ளைகள் உபத்திரவத்தின் சூளையில் கடந்துபோக
தேவன் அனுமதித்தாலும், தம்முடைய கண்களைக் கடிகாரத்தின் மேலும், தம்முடைய கரங்களை வெப்பநிலைக் கருவியிலும் வைத்திருப்பார் என்று வாரன் வியர்ஸ்பீ எழுதுகிறார். சில நேரங்களில் சூரியனையோ நட்சத்திரங்களையோ நாம் பார்க்க முடியாமற்போகலாம்; பெருங்காற்று மிக அதிகமாய் வீசலாம். அப்போது நாம் நினைத்துப் பார்க்கவேண்டியது - பிறரது ஆலோசனை சரியற்றுப் போகலாம், கடந்தகால அனுபவங்கள் வெளிச்சம் தராமல் போகலாம்; ஒரேயொரு ஆலோசனை மட்டும் என்றும் இருக்கும் - எனவே, தேவனைப் பற்றிக்கொள்ளவேண்டும். தேவனுடைய உண்மைத்துவத்தை, எக்காலமும் உள்ள அவரது அன்பை நாம் உறுதியுடன் பற்றிப் பிடித்துக்கொள்ளவேண்டும்.
அன்பானவர்களே, பிரச்சனை கதவைத் தட்டுகையில் நாம் முதலாவது தேவனிடத்தில் ஓடுகிறோமா? இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்ற அவரது வாக்குத்தத்தத்தை நாம் நினைவில் வைப்போம். இந்த அசைக்கமுடியாத உறுதிப்பாடு, கலகக்கார இஸ்ரவேலரை வனாந்தரப் பாதையில் நடத்துவதற்கான பெலத்தை, தைரியத்தை மோசேக்குக் கொடுத்தது.
ஜெபம்: ஆண்டவரே, தடைகள், கஷ்டங்கள், பிரச்சனைகள் நெருக்கும்போது, நான் மோசேயின் முறையைப் பின்பற்ற உதவும். தேவனிடம் ஜெபத்தின்மூலம் கொண்டுசெல்வேன் என்று நான் செயல்பட உதவும். ஜனங்கள் நிந்திக்கலாம், கைவிடலம், ஆனால் நீர் சகலத்தையும் கட்டுப்படுத்துகிறீர் என்று நினைவுகூர்ந்து, ஜெபத்தைக் கேட்கிறவராகிய உம்மை நான் பற்றிக்கொள்வேன். ஆமென்.
அன்பானவர்களே
இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12 மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து, இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம். நீங்கள் எந்த அரை மணி நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். உங்களுக்கு ஜெபக்குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும். நன்றி . அலுவலக தொடர்பு எண் - 9444456177.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான,
சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comentarios