top of page

From the Editors’ Desk

 

January 2025

 

Dearly beloved,

Wish you all a blessed and peace-filled New Year 2025.  We pray that the Lord would crown this year with His bountiful blessings and goodness.  May He guide us with His Word and guard us with His presence every moment in this year.  Let us be keen to hear His voice and follow His steps.  

 

Revelation 3: 7-8 says, “These are the words of Him who is holy and true, who holds the key of David.  What He opens no one can shut, and what He shuts no one can open ... See, I have placed before you an open door that no one can shut.”  These words were spoken by our Lord to the church of Philadelphia.  The city of Philadelphia was a prosperous city.  It had one of the greatest highways in the world, the highway which led from Europe to the East.  It was also called the “little Athens,” because it had temple-scattered streets, which reminded Athens, the center of worship of the Olympian gods.  The Lord Jesus said to this church that they had an open door set before them - the door of evangelism.  Since Jesus is the One who holds the key, He Himself opens the door, and no one can shut it, and when He shuts it no one can open it.  Jesus had the authority to keep this door open for the Christians in Philadelphia.  All of us have had closed door and open door experiences in our lives.  Even in this 2025 we may have some of these.  An open door is a good thing!  We rejoice when the door of opportunity is opened to us.  On the other hand, a closed door usually fills us with feelings of disappointment.  We must keep in mind that closed doors of life are just as precious as the open doors.  We may wonder, “How can I know when God has opened a door?”  The simplest answer to this is, that we will not know until we go through the door.  God rarely shows us the big picture of our life in advance.  Jesus Himself, who is holy and true, has all authority to open doors for His people.  It is His job to open the door and our job is to go through the open doors.  When He opens, one door at a time, let us walk forward one foot in front of the other, going wherever He may lead us.  One door may open, the other may close.  We may have to wait for sometime or go through another door, but let us not be discouraged.  All we need to do is to trust the Lord.  We may have little strength like the church of Philadelphia.  But if we have great faith and hold fast to His Word, we can see wonders this year.  Amen.       

     

We need your prayer support.  Do remember to pray for us and Honey Drops ministry in your daily prayers.  Happy New Year once again. 

 

Thank you.  God bless!

Yours in His service,

Samuel Premraj & Manjula Premraj

மனம் திறந்து உங்களுடன்...

ஜனவரி 2025

அன்பானவர்களே,

பிறக்கின்ற இந்த 2025 சமாதானம் நிறைந்த, ஆசீர்வாதமான ஆண்டாயிருக்க உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறோம். ஆண்டவர் இந்தப் புத்தாண்டைத் தம்முடைய நிறைவான ஆசீர்வாதங்களாலும், நன்மையினாலும் முடிசூட்டுவாராக! தம் வார்த்தையினால் நம்மை நடத்தி, தமது பிரசன்னத்தினால் இந்த ஆண்டின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம்மைப் பாதுகாப்பாராக. அவரது குரலைக் கேட்டு, அவர் அடிச்சுவடுகளில் நடக்க நாம் ஆர்வமாயிருப்போமாக!

வெளிப்படுத்தின விசேஷம் 3: 7,8, பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடி திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது *... இதோ திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்* என்கிறது. இந்த வார்த்தைகள் நம் ஆண்டவர் பிலதெல்பியா சபைக்குச் சொன்ன வார்த்தைகள். பிலதெல்பியா பட்டணமானது வளமை நிறைந்த பட்டணம். உலகிலேயே மிகவும் சிறந்த, ஐரோப்பாவிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலை அங்கே இருந்தது. அதன் தெருக்களில் அங்குமிங்குமாயிருந்த அநேக கிரேக்க ஆலயங்கள் அத்தேனே பட்டணத்தை நினைவூட்டுவதால் சின்ன அத்தேனே பட்டணம் என்றும் அதனை  அழைத்தனர். ஆண்டவர் இயேசு அந்தப் பட்டணத்தின் சபைக்குச் சொன்னது, அவர்களுக்கு முன்பாக ஒரு திறந்தவாசல் இருக்கிறது, அது சுவிசேஷத்தின் வாசல்! அந்த வாசலுக்கான சாவியை இயேசு வைத்திருக்கிறதால், அவரே அந்த வாசலைத் திறக்கிறார்; ஒருவனும் அதைப் பூட்டமுடியாது;அவர் மூடினால் ஒருவனும் அதை திறக்கமுடியாது! பிலதெல்பியாவிலிருந்த விசுவாசிகளுக்கு இந்த வாசலை அவர் திறந்துவைத்திருந்தார். நாம் அனைவரும் நம் வாழ்விலே திறந்த வாசல்களையும், மூடப்பட்ட வாசல்களையும் அனுபவித்திருக்கிறோம். இந்த 2025ம் ஆண்டிலும் இவற்றை நாம் காணலாம். திறந்திருக்கின்ற வாசல் நன்மையானது! வாய்ப்பின் வாசல் நமக்காகத் திறக்கம்படும்போது நாம் மகிழ்ச்சியடைகிறோம். மாறாக, ஒரு வாசல் அடைக்கப்படும்போது நம்மில் நிரம்புவது ஏமாற்றமே. அடைக்கப்பட்ட வாசல்களும் திறக்கப்பட்ட வாசல்களைப்போலவே விலைமதிப்பற்ற ஒன்று. ஆண்டவர் வாசலைத் திறந்துவிட்டாரா என்று நான் எப்படி அறிவது? என்று நீங்கள் எண்ணலாம்.  அதற்கான எளிய பதில், வாசலுக்குள் நுழைந்தாலே ஒழிய நாம் அதை அறியவே முடியாது. தேவன் நம் வாழ்வை முன்பதாக நமக்கு முழுமையாகப் படம் பிடித்துக் காட்டுவது அரிது. பரிசுத்தமும் உண்மையுமுள்ள ஆண்டவர் இயேசுவே தம்முடைய ஜனங்களுக்கு வாசலைத் திறப்பதற்கான சகல அதிகாரமும் உள்ளவர். வாசலைத் திறப்பது அவரது வேலை, திறந்த வாசலுக்குள் நுழைவது நமது வேலை. அவர் ஒரு வாசலைத் திறக்கும்போது அதற்குள் நுழைய நாம் ஓரடி வைத்து, அவர் நடத்தும் வழியில் செல்லவேண்டும். ஒரு வாசல் திறக்கப்படலாம், அடுத்த வாசல் மூடப்படலாம். நாம் சற்று நேரம் காத்திருக்க நேரிடலாம். அல்லது திறந்த வாசல் வழியே செல்ல நேரலாம். எப்படி இருந்தாலும் நம் சோர்ந்துபோகக்கூடாது. நாம் செய்யவேண்டிய ஒரே காரியம், தேவன்மேல் நம்பிக்கையாயிருப்பதே! பிலதெல்பியா சபையைப்போல நமக்குக் கொஞ்ச பெலன் இருக்கலாம். ஆனால், நாம் மிகுந்த விசுவாசமாய், அவரது வார்த்தையைப் பற்றிக்கொண்டால் அதிசயங்களை இந்த ஆண்டில் காண்போம்!

எங்களுக்கு உங்களுடைய ஜெப உதவி மிகவும் தேவையாயிருக்கிறது. உங்கள் அனுதின ஜெபங்களில் எங்களையும் தெளிதேன் ஊழியங்களையும் நினைத்துக்கொள்ளுங்கள். மறுபடியுமாக உங்களுக்கு எங்களது புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. 


 

கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான,  

சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்

Clay pottery with table linens
My Life of Hope Collage.jpeg

For a Special Cause

My Life of Hope - A true life changing experience of Mahizha Jemima Tyagaraj -

​​

She has encountered a multitude of struggles as a result of her significant illness, and through this book, she illustrates how she was able to overcome these obstacles with the help of God.  Indeed, her journey will inspire hope and offer encouragement to every reader navigating through difficult times.

​​

The revenue generated from the sale of this book will be directed towards the "Person to Person" Scheme at CMC Vellore, which provides medical treatment for economically disadvantaged individuals suffering from renal ailments.

Devotional

YHWH
Breath of Life
" He is Sufficient for you"

Welcome to your online Christian store! Our mission  is to  access  Word of God, by everyone in some format. Seeing God's Word can inspire and encourage to be Christ likeness.  It helps to trust in His promises, no matter what challenges you face. Choose your best format to resonate the Word of God. At the same time no compromise on the quality of the Resources.  

God Bless You..

Join our Mailing List

To Subscribe Daily Devotion-Honey Drops

Honey Drops
bottom of page